அதிகளவானவர்கள் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் இனிப்பு சுவையூட்டப்பட்ட பானங்களையே அதிகளவில் அருந்தி வருகின்றனர்.
இவ்வாறான பானங்களால் உடற்பயிற்சியின் போது இழந்த சக்தியை மீட்க முடியாது.
ஆனால் இவற்றைத் தவிர்க்குமாறு Rutgers பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் Shawn Arent என்பவர் தெரிவித்துள்ளார்.
எனவே உடல் வாகை அதிகரிப்பதற்காக கடுமையான பயிற்சி மேற்கொள்பவர்கள் புரதச்சத்து நிறைந்த பானங்களை உடற்பயிற்சியின் பின்னர் அருந்த வேண்டும் எனவும், இதனால் இழக்கப்பட்ட சக்தியினை மீட்டுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு புரதம் கலந்த பானங்களை அருந்தும் போது அவற்றில் புரதத்தின் அளவு 20 கிராம்களுக்கு மேற்படாதவாறு இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.