தேவையான பொருட்கள்:
* கடலை மாவு – 4 கப்
* சுத்தமான நெய் – 2 கப் (இளக வைக்க)
* பாதாம் பருப்பு : 10-12 (சீவல் அல்லது துண்டாக்கப்பட்டது)
* பிஸ்தா பருப்பு – 10-12 (சீவல் அல்லது துண்டாக்கப்பட்டது)
* சர்க்கரை – 2 கப் (தூளாக்கப்பட்டது)
* பச்சை ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை: 1. ஆழமான வாணலியை எடுத்தது அதில் நெய்யாய் ஊற்றவும்
2. அது நன்கு கரைந்தவுடன் அதில் கடலை மாவை சேர்க்கவும் 3. நன்கு பொன்னிறமாக வரும்வரை தொடர்ச்சியாகக் கிளறவும்
4. கீழே அடி பிடிக்காத அளவிற்கு நன்றாகவும் தொடர்ச்சியாகவும் கிளற வேண்டியது அவசியம் 5. பாகு நல்ல பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் தூளை போடவும்
6. அடுத்து பிஸ்தா மற்றும் பாதாம் சேவலை அதில் சேர்த்துக் கிளறி ஸ்டவ்வை அணைக்கவும் 7. இந்த கலவையை வாணலியிலிருந்து ஒரு பெரிய பேசின் அல்லது பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்
8. பாகை சற்று சிறிதளவு கடினமாகும் வரை குளிரவிடுங்கள் 9 இந்த கலவையை மேலும் கிளறி அதில் சர்க்கரைத் தூளை (நன்கு மென்மையாகத் தூளாக்கிய) சேர்க்கவும்
0. இந்த கலவையை மேலும் கிளற பாகு நல்ல சமநிலைக்கு வரும் 11. இதை எந்த கட்டியும் இல்லாதவாறு பிசைந்து விடவும்
2. ஒரு தட்டையான பாத்திரத்தை எடுத்து அதில் நெய்யை எல்லா புறமும் தடவி விடவும் 13. இதற்கு கையை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்
14. பாத்திரத்தில் உள்ள கலவையை இந்த தட்டை பாத்திரம் அல்லது ட்ரேவிற்கு மாற்றவும். 15. மேலே பாதாம் தூவல்களை தூவிப் பரப்பவும்
16. 2-3 மணி நேரத்திற்கு இதை அப்படியே விட்டு அதனை தேவையான வடிவங்களில் பரப்பியாக வெட்டி எடுக்கவும்