தேவையான பொருட்கள்:
* இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 3 கப்
* அரிசி மாவு – 1 1/2 கப்
* தயிர் – 1 கப்
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* துருவிய கேரட் – 1 கப்
* கொத்தமல்லி – ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், அரிசி மாவு, தயிர் மற்றும் நீரை ஊற்றி பணியார மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
Oats Kuzhi Paniyaram Recipe In Tamil
* பிறகு கேரட் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 30 நொடிகள் வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு வதக்கியதை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் சிறிது எண்ணெய்களை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அந்த பணியாரக் குழிகளில் தயாரித்து வைத்துள்ள பணியார மாவை ஊற்றி, அடிப்பகுதி வெந்ததும், திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் குழி பணியாரம் தயார்.