28.5 C
Chennai
Sunday, Dec 15, 2024
14 1450073500 4 nightcream 1
ஆண்களுக்கு

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அழகு சாதனப் பொருட்கள்!

பெண்கள் மட்டும் தான் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, ஆண்களும் தங்கள் அழகைப் பராமரிக்க வேண்டுமானால் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் தங்களின் அழகின் மேல் அக்கறை இருக்கும். மேலும் ஆண்களுக்கும் சரும பிரச்சனைகள் எல்லாம் வரும். இதெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், முறையான பராமரிப்புக்களை ஆண்கள் தங்களின் சருமத்திற்கு கொடுத்து வர வேண்டும்.

அதற்கு அவர்கள் தங்கள் சருமத்திற்கு தேவையான அடிப்படி அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இங்கு ஒவ்வொரு ஆணும் தங்கள் அழகைப் பராமரிக்க கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பாடி வாஷ்

பாடி வாஷ்ஷில் சோடியம் ஹைட்ராக்ஸைடு குறைவாக உள்ளது. எனவே சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக பாடி வாஷ் பயன்படுத்து நல்லது. சோப்பை அடிக்கடி பயன்படுத்தினால், சருமத்தில் வறட்சி அதிகரிக்கும். எனவே சோப்பை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

ஷேவிங் க்ரீம்/ஜெல்

ஒவ்வொரு ஆணும் ஷேவிங் க்ரீம்/ஜெல் வாங்கும் போதும், அதில் கிளிசரின் மற்றும் ஷியா வெண்ணெய் இருக்குமாறான ஷேவிங் க்ரீம்/ஜெல் வாங்கிப் பயன்படுத்தினால், சரும செல்கள் பாதுகாக்கப்பட்டு, சருமமும் பொலிவோடு இருக்கும். எனவே ஷேவிங் சோப்பு வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இனிமேல் ஷேவிங் ஜெல்/க்ரீம் வாங்கிப் பயன்படுத்துங்கள்.

எலக்ட்ரிக் ரேசர்

தினமும் ஷேவிங் செய்வதற்கு சாதாரண ரேசர்களைப் பயன்படுத்தாமல், எலக்ட்ரிக் ரேசர் பயன்படுத்தி வந்தால், உங்கள் கன்னப்பகுதி மிகவும் மிருதுவாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

நைட் க்ரீம்

பலருக்கும் நைட் க்ரீம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கடைகளில் பார்த்திருப்பீர்கள். ஆம், நைட் க்ரீம்மை இரவில் படுக்கும் முன் சருமத்தில் தடவி வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் தூங்கும் போது சரிசெய்யப்பட்டு புத்துயிர் பெறும். சரும செல்கள் புத்துயிர் பெற்றால், சருமம் பொலிவோடும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

ஆஃப்டர் ஷேவ் லோசன்

ஷேவிங் செய்து முடித்த பின் தவறாமல் ஆஃப்டர் ஷேவ் லோசனைப் பயன்படுத்த வேண்டும். இதனால் ஷேவிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் சரிசெய்யப்பட்டு, ரேசர் மூலம் தொற்றுக்கள் ஏற்படாமலும் இருக்கும். ஆனால் ஆஃப்டர் ஷேவ் லோசன் வாங்கும் போது, அதில் வைட்டமின் ஈ மற்றும் சீமைச்சாமந்தி உள்ளதாக என்பதை பார்த்து வாங்குங்கள். இதனால் சருமம் வறட்சியின்றி புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

பெர்ஃப்யூம்

எவ்வளவு தான் அற்புதமாக உடைகளை அணிந்திருந்தாலும், சற்று நல்ல வாசனை வீசினால் தான் பெண்களை எளிதில் கவர முடியும். எனவே ஓர் நல்ல பெர்ஃப்யூம் ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டியது அவசியம்.

மாய்ஸ்சுரைசர்

முக்கியமாக ஆண்கள் தங்கள் கைகள் மற்றும் கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும். மாய்ஸ்சுரைசர் தடவாமலேயே இருந்தால், சரும சொறி பிடித்தது போன்று காணப்படும்.

சன் ஸ்க்ரீன்

லோசன் சன் ஸ்க்ரீன் லோசனை வெளியே வெயிலில் செல்லும் முன் தடவிக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் சூரியக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். எனவே சன் ஸ்க்ரீன் லோசன் பெண்களுக்கு மட்டும் தான் என்று நினைப்பதை தவித்திடுங்கள்.

14 1450073500 4 nightcream 1

Related posts

ஆண்கள் தினமும் ஹேர் ஜெல் பயன்படுத்தலாமா?

sangika

ஆண்களே! கருமையான மற்றும் அடர்த்தியான தாடி வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

இவ்வாறான பெண்களுடனான உறவில் சிறந்து விளங்குவார்களாம்……

sangika

தினமும் 1 முட்டையா? ஆண்மை குறைவா?!

sangika

தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள்

sangika

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

sangika

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

sangika

இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது!…

sangika