Kaduku
மருத்துவ குறிப்பு

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்பிளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோளிணி எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.
Kaduku

Related posts

உங்கள் துணை காதலில் எப்படிப்பட்டவர் என்பதை தெரிஞ்சுக்க இத மட்டும் கவனிச்சா போதும்!

nathan

உஷாரா இருங்க! உங்க நாக்கில் இந்த மாற்றங்கள் இருந்தால் நீங்க பெரிய ஆபத்தில் இருக்கீங்கனு அர்த்தமாம்…!

nathan

பல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு

nathan

தம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்னைக்கு காரணம்

nathan

கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க

nathan

வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

nathan

கர்ப்பத்தின் மூன்று மாத காலத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான தொடர்பை வலிமைப்படுத்த சில டிப்ஸ்….

nathan

உங்களுக்கு அடிக்கடி தலைவலி மண்டைய பொளக்குதா?… சூப்பர் டிப்ஸ்…

nathan