தினமும் ஷேவ் செய்து கிளீனாக வைத்திருக்கும் பழக்கம் இருப்பவர்கள் காலையில் எழுந்து ஷேவ் செய்ய ரெடியான பின் ஷேவிங் க்ரீம் டப்பா காலியாக இருந்தால் எவ்வளவு எரிச்சல் வரும். இனிமேல் அந்த மாதிரி டென்ஷனெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை.
நேரா வீட்டுக்குள் போங்க. பேபி ஆயில், ஹேர் கண்டிஷ்னர், சியா பட்டர், தேன், வேர்க்கடலை பட்டர், பீநட் பட்டர், கற்றாழை, பாடி லோஷன் ஆகிய இவற்றில் ஒன்றை கையில் எடுத்து ஷேவ் பண்ணுங்க. சூப்பரா இருக்கும். அப்படி என்னென்ன பொருள்களை ஷேவிங் கிரீமுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
பேபி ஆயில்
பொதுவாக வீட்டில் குழந்தைகள் யாராவது இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக பேபி ஆயில் இருக்கும். இந்த பேபி ஆயிலை சருமத்தில் அப்ளை செய்து ஷேவ் செய்கிற பொழுது, வழக்கமாக ஷேவ் செய்யும்போது ஏற்படுகிற எரிச்சல், கீறல்கள் ஆகிய எதுவும் உண்டாகாது. அதேபோல் ஷேவிங் மெஷினில் உள்ள பிளேடும் சொரசொரப்பு தன்மை இல்லாமல் மிருதுவாக மாறிவிடும். ஒரு சில துளிகள் இருந்தாலே போதும் மென்மையான ஷேவை பெறலாம்.
ஹேர் கண்டிஷ்னர்
ஷேவிங் க்ரீம் இல்லாமல் ஷேவ் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அடுத்த பெஸ்ட் சாய்ஸ் நீங்கள் தினமும் தலைக்கு பயன்படுத்துகிற ஹேர் கண்டிஷ்னர் பயன்படுத்தினாலே போதுமானது. இதில் சருமத்தை பாதுகாக்கிற பல உட்பொருள்கள் உள்ளதால் இது உங்களுடைய சருமத்துக்கு நன்மைகளை தரும். சருமத்தை வறட்சி இல்லாமல் நீரோட்டமாக வைத்திருக்கும். மேலுமு் இது சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்கும்.
சியா பட்டர்
பட்டர்களில் பல வகை உண்டு. அதில் சியா பட்டரும் ஒரு வகை. இதை பெரும்பாலும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. நிறைய பேர் ஷேவ் செய்த பிறகு சரும எரிச்சலில் இருந்து தடுக்கவும் சருமத்தை மென்மையாக்கவும் ஆஃப்டர் ஷேவ் க்ரீம் உபயோகிப்பார்கள். அந்த க்ரீம்களில் முக்கிய உட்பொருளாக சியா பட்டர் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்த பட்டரைப் பயன்படுத்தியே ஷேவ் செய்யலாம். சருமம் இன்னும் மென்மையாகும்.
பழைய சோப்புகள்
நம்முடைய வீட்டில் பன்படுத்தி விட்டு சிறிய அளவானதும் சோப்பை தூக்கி விசிவிடுவோம். அந்த சோப்பை ஒரு டப்பாவில் போட்டு ஷேவ் செய்ய பயன்படுத்துங்கள். சருமமும் மிருதுவாகும். ஷேவ் செய்யும் போது சருமங்களில் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் முடியும்.
தேன்
தேனை சில துளிகள் சருமத்தில் தடவி, பின் ஸ்மூத்தாக ஷேவ் செய்ய முடியும். இதைத் தெரியாமல் தான் இவ்வளவு நாள் அவதிப்பட்டிருப்பீர்கள். சருமம் மாய்ச்சரைஸ் ஆகும். நல்ல பொலிவும் உண்டாகும். தேன் ரொம்ப திக்காக பிசுபிசுப்பாக இருப்பதாக உணர்ந்தால் அதில் சிறிது தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள். ஷேவ் செய்த பின் ரேஷரையும் பிளேடையும் நன்கு சுத்தம் செய்து விட்டு வையுங்கள்.
பீநட் பட்டர்
நேரா கிச்சனுக்குப் போனீங்களா? தேன் இல்லையா கவலையே பட வேண்டாம். எப்படியும் பிரிட்ஜில் பிரட்டுக்கு தொட்டுக் கொள்ள பீநட் பட்டர் வைத்திருப்போம். அதுல ஒரு ஸ்பூன் எடுத்துட்டு வாங்க. அவசரப்பட்டு சாப்பிட்டறாதீங்க. அது சாப்பிட இல்ல ஷேவ் பண்ண. ஷேவிங் க்ரீமுக்கு பதிலாக பீநட் பட்டரையும் வெச்சு ஷேவ் பண்ண முடியும்.
கற்றாழை
மேலே சொன்ன எல்லா விஷயத்தையும் விட எந்தவித செலவும் இல்லாத அதேசமயம் ஆரோக்கியமான இயற்கையான ஷேவிங் க்ரீம் எது தெரியுமா? கற்றாழை தான். கற்றாழை ஜெல்லை ஷேவிங் க்ரீமுமு் பதிலாக பயன்படுத்துவது இன்னும் ஆரோக்கியமானது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.