பொதுவாக எண்ணெய்கள் உடல் எடையை அதிகரிக்கத் தான் உதவும் என்று பலரும் நினைக்கின்றனர். ஏனெனில் எண்ணெய்களில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது என்பதால் தான். ஆனால் சில எண்ணெய்களில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. மேலும் அந்த எண்ணெய்கள் உடல் எடையை அதிகரிக்காமலும் தடுக்கும்.’
உதாரணமாக, ஆலிவ் எண்ணெயில் கலோரிகள் குறைவு என்பதால், அதனை அஞ்சாமல் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இதுப்போன்று நிறைய எண்ணெய்கள் நம் உடல் எடையை அதிகரிக்காமல், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது.
குறிப்பாக, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களை சமையலில் சேர்த்தால், உடல் பருமன் அடையாமல் தடுக்கலாம். சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க நினைப்போர், சமையலில் சேர்க்க வேண்டிய எண்ணெய்கள் என்னவென்று பார்ப்போமா!!!
தேங்காய் எண்ணெய்
பலரும் தேங்காய் எண்ணெய் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்று நினைத்து அதனை சமையலில் சேர்க்க அஞ்சுகின்றனர். ஆனால் உண்மையில் தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்திருப்பதோடு, அவை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், நோய்களை தடுக்கவும், உடலின் ஆற்றலை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும் உதவும். ஆகவே எடையைக் குறைப்போர் பயமில்லாமல் தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்க்கலாம்.
ஆலிவ் ஆயில்
பலரும் அறிந்த மிகவும் ஆரோக்கியமான ஒரு சமையல் எண்ணெய் என்றால் அது ஆலிவ் ஆயில் தான். ஏனெனில் இந்த எண்ணெயில் 78% மோனோசாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் 14% சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் உள்ளது. மேலும் ஆலிவ் ஆயில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதும் கூட.
கனோலா ஆயில்
கனோலா ஆயில் கூட எடையை குறைக்க நினைப்போருக்கு ஏற்ற எண்ணெய் தான். ஏனென்றால் இதில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளைக் கொண்டுள்ளது. இந்த ஆசிட்டுகள் கொழுப்புக்களை கரைக்கவும், உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
அரிசி தவிடு எண்ணெய் (Rice Bran Oil)
அரிசி தவிடு எண்ணெயும் ஆரோக்கியமான ஒரு சமையல் எண்ணெய். ஏனெனில் இதில் ஸ்டார்ச் அளவாக நிறைந்துள்ளது. பொதுவாக ஸ்டார்ச் உடலுக்கு ஆற்றலை வழங்கும். இதனால் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து எடையைக் குறைக்கலாம்.
வேர்க்கடலை எண்ணெய்
வேர்க்கடலை எண்ணெய் கிடைப்பது அரிது. இருப்பினும் இந்த எண்ணெய் உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இந்த எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால், உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும்.
சூரியகாந்தி எண்ணெய்
பலரும் நன்கு அறிந்த ஒரு எண்ணெய் தான் சூரியகாந்தி எண்ணெய். இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ வளமாக நிறைந்திருப்பதோடு, அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், இந்த எண்ணெய் சமையலில் பயன்படுத்தலாம்.