உதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கருத்துவிடும்.
பித்த உடம்பாக இருந்தாலும் உதடு கருக்கும். அல்லது அடிக்கடி நாவினால் உதட்டை ஈரப்படுத்தும்போதும் உதடு கருப்பாகும்.
மிகச் சிறந்த வழி அடிக்கடி நீங்கள் நீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் உதடு கருக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் உதடு கருப்பாகிவிட்டால் என்ன செய்யலாம். கருத்த உதட்டை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டு வர இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனளிக்குதா என பாருங்கள்.
எலுமிச்சை மற்றும் மஞ்சள் :
எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வாருங்கள். கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.
யோகார்ட் :
யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் யோகர்ட்டை உதட்டில்
தடவி வாருங்கள். யோகார்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம். வேகமாக கருமையை மறையச் செய்யும்.
தக்காளி :
தக்காளி சருமத்தில் ப்ளீச்சிங் செய்யும் குணம் கொண்டது. சென்ஸிடிவ் சருமம் இருப்பவர்களுக்கு ஏற்றது. தக்காளி துண்டை எடுத்து உதட்டை சுற்றிலும் காணப்படும் கருமை மீது தடவி வாருங்கள். காய்ந்ததும் கழுவலாம்.
உருளைக் கிழங்கு மற்றும் வெள்ளரி :
உருளைக் கிழங்கிலும் ப்ளீச்சிங்க் செய்யும் ஆற்றல் உள்ளது. வெள்ளரிக்காய் மென்மையையும் ஈரப்பதத்தையும் அளிக்கும்.
உருளை துண்டு மற்றும் வெள்ளரிக்காயில் சாறெடுத்து உதட்டின் மீது தினமும் தடவுங்கள்.
காய்ந்ததும் கழுவ வேண்டும். இந்த குறிப்பு கருமையை மங்கச் செய்து உதட்டை சிவப்பாக்கும்.
வெண்ணெய் :
ஈரப்பதம் குறையும் போதும் உதட்டைச் சுற்றிலும் கருமை ஏற்படும். இதனை தவிர்க்க தினமும் வெண்ணெயை உதட்டில் தடவுங்கள்.
அது போல், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயும் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும். இதனால் கருமை நாளடைவில் மறையும்.
ரோஸ் வாட்டர் :
ரோஸ் வாட்டர் உதட்டில் ஏற்படும் கருமையை போக்க சிறந்தது.
ரோஸ் வாட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள்.
தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.