26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

8da0820d-a4d2-4b93-8608-42dd9608ee24_S_secvpf.gif

தேங்காய் எண்ணெயில் பல்வேறு வகையான உடல்நல பயன்கள் உள்ளது. தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு. இப்போது உதடு வறண்டு போகாமல் தடுக்க தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

• உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. முக்கியமான காரணமாக அமைவது வெப்பநிலை மாற்றங்கள் அல்லது உதட்டை அதிகமாக நக்குவதே. உங்கள் உதட்டிற்கு ஈரப்பதத்தை உண்டாக்க இயற்கையான வழியில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். இந்த இனிப்பான எண்ணெயில் பல விதமான கனிமங்கள் அடங்கியுள்ளது. உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்திட இது உதவுகிறது.

• 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.

• தேங்காய் எண்ணெய்யை உங்கள் உதட்டின் மீது கொஞ்சமாக தடவவுங்கள். பின் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது உதடு வறண்டு போகும் போதெல்லாம் இதை செய்யலாம்.

• 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் ¾ டீஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளவும். இந்த கலவையை மூடி போட்ட ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் உதட்டிற்கு எப்போதெல்லாம் நீர்ச்சத்து தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம்.

Related posts

ட்ரை பண்ணி பாருங்க ! இதோ இயற்கையான மாதுளை “FACE PACK”

nathan

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை

nathan

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு!…

sangika

இவ்வாறான உங்களின் செயற்பாடுகளினால் கண்களின் அழகுகள் பாதிக்கப்படுகின்றன!…

sangika