நமது உணர்ச்சிகளே நம்மைக் கொல்லும் என்பது தெரியுமா? ஆம், நமது உணர்ச்சிகளும், உடலும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், மற்றொன்றும் பாதிப்பிற்குள்ளாகும். உணர்ச்சிகளில் இரு வகைகள் உள்ளன. அவை நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள்.
நேர்மறை உணர்ச்சிகளின் போது நல்ல கெமிக்கல்கள் உடலில் சுரக்கப்படும். அதுவே எதிர்மறை உணர்ச்சிகளாக இருந்தால், மன அழுத்த ஹார்மோன் மற்றும் அட்ரினலின் வெளியேற்றப்படும். இந்த எதிர்மறை உணர்ச்சியினால் வெளியேற்றப்படும் மன அழுத்த ஹார்மோன் தான் உடல் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம். சரி, இப்போது உணர்வுகள் எப்படி மனிதனைக் கொல்கிறது என்று பார்ப்போம்.
கோபம் கல்லீரலை பலவீனமாக்கும் ஒருவர் அளவுக்கு அதிகமாக கோபம் கொண்டால், அவர்களுக்கு செரிமான பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதேப்போல் கோபத்தை அடக்குவதன் மூலம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும்.
கவலை மண்ணீரலை இடையூறு செய்யும் கவலையினால் மிகுந்த சோர்வு மற்றும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, அடிவயிற்றில் உள்ள மண்ணீரல் கூட கவலையினால் பாதிப்பிற்குள்ளாகும்.
சந்தோஷம் இதயத்தை பாதிக்கும் ஆம், அளவுக்கு அதிகமான சந்தோஷம் கூட சில நேரங்களில் மாரடைப்பை ஏற்படுத்தும். உங்களின் உடலினுள் அழுத்தமானது எவ்வித உணர்வுகளினால் ஏற்பட்டாலும், அதனால் பதற்றம், மறதி மற்றும் இதய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மனதை துன்புறுத்தும் எண்ணங்கள் மனதின் நிம்மதியைக் குலைத்து தூக்கத்தையே தொலைக்க வைக்கும் எந்த ஒரு பிரச்சனையும், மண்ணீரலைப் பாதிக்கும். மேலும் மனதில் கஷ்டம் மிகுந்து இருந்தால், பசியின்மை ஏற்படுவதோடு, சருமமும் வெளிரிய நிறத்தில் மாறும்.
பயம் சிறுநீரகங்களை பாதிக்கும் அளவுக்கு அதிகமான பயத்தின் போது சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படும் தானே? பதற்றம் மற்றும் மிகுந்த பயம் நேரடியாக சிறுநீரகங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும். இதுவே நீடித்தால், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
அளவுக்கு அதிகமான சோகம் நுரையீரலை பாதிக்கும் நீங்கள் அளவுக்கு அதிகமான சோகத்தில் மூழ்கினால், நுரையீரல் பாதிக்கப்படும். ஏனெனில் அதிகமான சோகத்தின் போது மன இறுக்கம், அழுகை மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
அதிர்ச்சி இதயம் மற்றும் சிறுநீரகங்களைக் கொல்லும் நீங்கள் அதிர்ச்சி அடையும் போது, இதயம் மற்றும் சிறுநீரகத்தில் அட்ரினலின் வழிந்தோடுவதன் காரணமாக அதன் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். அதிலும் ஒருவர் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானால், உயிரையே இழக்கக்கூடும்.
சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய் விட்டு சிரிப்பதன் மூலம், மன அழுத்தம் முற்றிலும் நீக்கப்படும் மற்றும் அன்பு அதிகரிக்கும் போது பயம் நீக்கப்படும் மற்றும் சந்தோஷமான தருணத்தின் போது மன இறுக்கம் அகற்றப்படும். எனவே எப்போதும் நேர்மறை உணர்ச்சிகளுடன் இருந்து, வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.