செய்முறை….
முதலில் நேராக நிற்கவும். இரண்டு கைகளையும் ஒரு அடி அகற்றி உள்ளங்கைகளை முன்பாக நீட்டி தரையைப் பார்க்கும்படி வைக்கவும். ஒரு நாற்காலியில் உட்காருவது போல் மெதுவாகக் கீழிறங்கவும். இயல்பான மூச்சில் 3 நிமிடம் இருக்கவும். இதுபோல் மூன்று முறை செய்யவும்.
பலன்கள்….
மூட்டுக்கள் நன்கு பலம் பெறும். மூட்டு வலி வராது. ஆஸ்துமா, தோள் பட்டை வலி நீங்கும். நரம்பு மண்டலம் நன்கு இயங்கும். இரண்டு நிமிடம் இப்படி நின்றால் இரண்டு மணி நேரம் நடைப் பயிற்சி செய்த பலன் கிடைக்கும்.