கரும்பு இல்லாத பொங்கல், இனிப்பு இல்லாத பொங்கலை போல சுவையற்றது. தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான பொங்கலில் கரும்பு முக்கிய பங்குவகிக்கிறது. மார்கழி, தையில் விளைந்து விற்பனைக்கு வருகிறது கரும்பு. கரும்பு மற்றும் கரும்பின் மூலம் கிடைக்கும் இயற்கை சர்க்கரையான கரும்பு வெல்லத்தில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
அதேபோல இயற்கை பானமான கரும்பு ஜூஸ் பருகுவதாலும் கூட நிறைய உடலநல நன்மைகள் கிடைக்கின்றன. உடல் எடை, காமாலை, புத்துணர்ச்சி, நீர் வறட்சியை தடுத்தல் என நிறைய நன்மைகள் கரும்பு ஜூஸ் பருகுவதால் கிடைக்கிறது….
சத்துக்கள
கரும்பில் உடலுக்கு தேவையான மாவுச்சத்து, சர்க்கரை போன்றவை கிடைக்கிறது. இதிலிருப்பது இயற்கை சர்க்கரை என்பதால் உடலுக்கும் நல்லது.
உடல் பருமன்
மேலும் கரும்பு ஜூஸ் உடல் பருமன், தொப்பை குறைக்க உதவுகிறது. காபி, டீக்கு மாற்றாக தினமும் கரும்பு சாற்றை பருகலாம்
புத்துணர்வு
கரும்பு ஜூஸ் புத்துணர்வு தந்து உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
காமாலை
கரும்பின் சித்த மருத்துவ நன்மைகளில் மிகவும் முக்கியமானது, காமாலை வராமல் தடுப்பது என சித்த மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரகம்
சிறுநீரகப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது கரும்பு ஜூஸ்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் உள்ளவர்கள் கரும்பு ஜூஸை பருகிவர நல்ல தீர்வுக் காணலாம்.