உடல் எடை பிரச்சனையால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருவதோடு, அதைக் குறைக்க பல்வேறு கடினமான வழிகளையும் முயற்சிக்கின்றனர். ஆனால் அனைவராலுமே கடுமையான வழிகளை முயற்சிக்க முடியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிஸ்கட் மூலம் எப்படி உடல் எடையைக் குறைப்பது என்று கொடுத்துள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட், உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு இந்த பிஸ்கட்டை காலை உணவாக சாப்பிட வேண்டும். சரி, இப்போது உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி உடல் எடையைக் குறைக்க உதவும் தேங்காய் பிஸ்கட் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்: தேன் – 1/4 கப் சூரியகாந்தி விதைகள் – 1/2 கப் புரோட்டீன் பவுடர் – 1/2 கப் துருவிய தேங்காய் – 1/2 கப் பட்டைத் தூள் – 1 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/8 கப்
செய்முறை #1 முதலில் மைக்ரோஓவனை 300F சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை #2 பின்பு ட்ரேயில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, தட்டையாக தட்டி, ஓவனில் 15 நிமிடம் பேக்கிங் செய்தால், பிஸ்கட் தயார்.
நன்மை #1 இந்த தேங்காய் பிஸ்கட்டில் நார்ச்சத்துக்கள் மற்றும் உடலின் இயக்கத்திற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லை.
நன்மை #2 இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு சீராவதோடு, கொழுப்புக்களும் கரையும். ஏனெனில் இதில் நிறைய நல்ல கொழுப்புக்கள் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும்.