இது எப்படி வேலை செய்கிறது? அதிகளவிலான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நம்மில் பலரும் உட்கொண்டு வருவதால் தான் உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்படுகிறோம் என மைக் மெக்கனஸ் கூறியுள்ளார். தூங்கச் செல்வதற்கு முன்பு தேன் குடித்தால், தூங்க ஆரம்பித்த ஆரம்பகட்ட நிலையில், உங்கள் உடல் அதிகளவிலான கொழுப்புகளை எரிக்க தொடங்கும். நீங்கள் ஒரு படி மேலே சென்று, உங்கள் தேன் டயட்டின் ஒரு பகுதியாக, உட்கொள்ளும் அனைத்து ரிஃபைன்ட் சர்க்கரையையும் மாற்றி விட்டால், அதிகமாக சர்க்கரை உணவுகளை உட்கொள்ள தூண்டும் மூளையின் சமிக்ஞை சமநிலையாகிவிடும்.
சர்க்கரைக்கு பதில் தேனை மாற்றுங்கள் உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை நீக்குங்கள். அப்படியானால் அதில் செயற்கை இனிப்புகளும் தான் அடங்கும். உங்கள் தேநீர், காபி மற்றும் தானிய உணவுகளில் சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்துங்கள். நீங்கள் சமைக்கும் பொருட்களின் மீதும் ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அங்கேயும் சர்க்கரையை பயன்படுத்தாமல் இருக்கலாம்ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும் ஜங்க் உணவுகள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளாகும். அதில் கலோரிகள் மட்டுமே முழுமையாக அடங்கியுள்ளது. தேன் டயட்டில் இருந்து முழுமையான பயனை பெற ஜங்க் உணவுகளை உட்கொள்வதை முதலில் நிறுத்துங்கள்.