kidney function2
மருத்துவ குறிப்பு

உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்!

நமது உடல் ஒரு பெரிய அதிசயம்தான். உடலின் ஒரு செல்லும், உறுப்பும் என்னென்ன மாஜிக் செய்கின்றன என்று தனித்தனியாக பார்த்தால் வியப்புதான் மேலிடும். அதற்கு முன் உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.
மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33. மனித மூளையின் எடை 1.4 கிலோ.

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 KF. மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.
உடலின் மெல்லிய சருமம் கண் இமை. மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ., ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர். மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ. நம் உடல் எடையில் 9 சதவிகிதம் ரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான். நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம், பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது. நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப்பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கிறோம். முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன. நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம். நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோ மீட்டர் தூரம். அதுபோல தும்மும் போது, கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.kidney function2

Related posts

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் இதுதான்!

nathan

வீட்டில் பூச்சி தொல்லை இல்லாமல் தடுப்பதற்கான எளிய இயற்கை வழிமுறைகள்!!

nathan

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்!

nathan

அஜீரண கோளாறை போக்கும் தீபாவளி லேகியம்

nathan

லவ்வர் வேணுமா. மருந்து சாப்பிடுங்க.

nathan

வாய் நாற்றம் ஏற்படுவது ஏன் தெரியுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மக்கள் ஏன் வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறுவதற்கான சில எளிய டிப்ஸ்…

nathan