நாம் தினமும் தேய்த்து குளித்து சுத்தமாக இருப்பதற்கான காரணம் என்ன? உடலை சுத்தமாகவும். ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தானே. ஆனால் இதனால் வெளிப்புற உடல் சுத்தமாக இருக்கும்; உட்புற உடல் சுத்தமாகுமா என்றால் இல்லை. பின் அதை எப்படி சுத்தமாக வைத்திருப்பது? பலருக்கு அது தெரிவதில்லை.
உட்புற உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும், ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டும், என அடுக்கி கொண்டே போகலாம். இதையெல்லாம் கடைப்பிடித்தாலும் கூட உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.
ஆரோக்கியமற்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க நச்சுப்பண்பை நீக்கும் சில உணவுகள் உள்ளது. இவ்வகை உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஆற்றல் திறனை அதிகரித்து, மனநிலையை மேம்படுத்தும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பூண்டு
பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும், அது நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களே. பூண்டில் அல்லிசின் என்ற ரசாயனம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போரிடும். கொஞ்சம் பூண்டை நசுக்கி, உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
க்ரீன் டீ
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உள்ள சிறந்த வழிகளில் மற்றொன்று – உங்கள் உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொள்வது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உங்கள் கல்லீரலை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உட்பட அனைத்து நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவிடும்.
இஞ்சி
கொழுப்பு நிறைந்துள்ள உணவுகள் மற்றும் மதுபானத்தை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? இது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும். குமட்டலில் இருந்து நிவாரணம், செரிமான அமைப்பில் மேம்பாடு, வயிற்று பொருமல் மற்றும் வாய்வை குறைக்க இஞ்சியை பயன்படுத்துங்கள். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடும். ஆகவே நீங்கள் குடிக்கும் ஜூஸ்களில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது சீரான முறையில் இஞ்சி டீ குடியுங்கள்.
எலுமிச்சை
நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை. எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதால், அது உங்கள் சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும். அதேப்போல் இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராக போராடும். எலுமிச்சையால் உங்கள் உடலில் அல்கலைன் தாக்கமும் ஏற்படும். இதனால் உங்கள் உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்படும். கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட வெந்நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குங்கள். இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
பழங்கள்
நற்பதமான பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவைகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு பழங்களை உபயோகிக்கலாம். உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு மட்டும் மாயங்களை நிகழ்த்தாமல், செரிமானத்திற்கும் நல்லதை செய்யும். அதனால் காலை உணவுடன் நற்பதமான பழங்களை உண்ணுங்கள். இல்லையென்றால் நொறுக்குத் தீனியாகவும் பயன்படுத்துங்கள்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பலவித உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த சூப்பர் உணவு கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். பீட்ரூட்டை ஜூஸ் போட்டும் கூட குடிக்கலாம்.
கைக்குத்தல் அரிசி
நச்சுத் தன்மையை நீக்க உதவிடும் வைட்டமின் பி, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் கைக்குத்தல் அரிசியில் வளமையாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்த பெரிதும் உதவும். இதில் செலினியம் வளமையாக உள்ளதால் உங்கள்க கல்லீரல் பாதுகாக்கப்பட்டு உங்கள் மேனியின் நிறம் மேம்படும்.