உலகில் உள்ள டாப் 10 ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவில் கவனமாக இருப்பார்கள். மேலும் தங்களின் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க அன்றாடம் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
பலருக்கும் கலோரிக்கும், எடைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றே தெரியாது. பொதுவாக ஒரு நாளைக்கு ஒருவருக்கு சராசரியாக 1600 கலோரிகள் தேவைப்படுகிறது. கலோரிகளானது உடலுக்குள் செல்லும் போது ஆற்றலாக மாற்றப்படுகிறது. கலோரியானது உடலின் செயல்பாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக இருந்தால், மிஞ்சிய கலோரியானது கொழுப்புக்களாக உடலினுள் ஆங்காங்கு படிந்துவிடும். இதனால் தான் உடல் பருமனடைகிறது. இப்போது புரிகிறதா?
ஆனால் இன்றைய காலத்தில் அதிகப்படியான வேலையால் உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரம் இல்லாமல் போகிறது. அத்தகையவர்களுக்காக கலோரிகளை எரிப்பதற்கான சில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த வழிகள் சற்று முட்டாள்தனமானதாக இருந்தாலும், உண்மையிலேயே இவை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரித்துவிடும். வேண்டுமெனில் முயற்சித்துப் பார்த்து சொல்லுங்கள்.
சிரிப்பு நண்பர்களுடன் அமர்ந்து 10 நிமிடம் ஜோக் அடித்து நன்கு வாய் விட்டு சிரித்தால், குறைந்தது 40 கலோரிகள் எரிக்கப்படுமாம்.
படுக்கை விளையாட்டு துணையுடன் 30 நிமிடம் படுக்கையில் விளையாடினால் 200-க்கும் அதிகமாக கலோரிகளை எரிக்கலாம்.
முத்தம் ரொமான்டிக்கான மனநிலையில் துணைக்கு ஒரு நிமிடம் லிப் கிஸ் கொடுத்தால் 5 கலோரிகள் எரிக்கப்படும். தகவலை சொல்லிவிட்டோம், இனிமேல் எவ்வளவு நேரம் முத்தம் கொடுக்க நினைக்கிறீர்களோ, புகுந்து விளையாடுங்கள்.
சூயிங் கம் உங்களுக்கு சூயிங் கம் மெல்லும் பழக்கம் இருந்தால், ஒரு மணிநேரம் சூயிங் கம் மென்றால் 11 கலோரிகளை எரிக்கப்படுமாம்.
சாட்டிங் தோழி அல்லது காதலியுடன் ஒரு மணிநேரம் தொடர்ந்து சாட்டிங் செய்தால், 40 கலோரிகள் எரிக்கப்படுமாம். எனவே உடற்பயிற்சி செய்யவில்லை என்று கவலைக் கொள்ளாதீர்கள்.
வாக்கிங் தினமும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியுடன் 1 மணிநேரம் வாக்கிங் மேற்கொண்டால், 200 கலோரிகளை எரிக்கலாம்.
கட்டிப்பிடி வைத்தியம் உங்கள் துணையை 60 நிமிடங்கள் கட்டிப்பிடித்திருந்தால் 60 கலோரிகள் எரிக்கப்படும். எனவே அவ்வப்போது உங்கள் துணையுடன் கட்டிப்பிடி வைத்தியத்தை மேற்கொள்ளுங்கள்.
நடனம் தினமும் 15 நிமிடம் நடனமாடினால், 75-க்கும் அதிகமான கலோரிகளை எரிக்கலாம். அதிலும் துணையுடன் சேர்ந்து ரொமான்டிக் நடனம் என்றால் இன்னும் அதிகமாக எரிக்கலாம்.
ஷாப்பிங் ஷாப்பிங் செய்யும் போது, அங்குள்ள ட்ராலியை 30 நிமிடம் அங்கும் இங்கும் இழுத்து நடந்தால், 100-க்கும் அதிகமான அளவில் கலோரிகளை எரிக்கலாமாம்.