நம்மில் பெரும்பாலானோருக்கு நமக்கு சென்சிடிவ் ஸ்கின் என்பது தெரியும். அதிலும் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கலந்து கொண்டவர்களில் கிட்டதட்ட 52 சதவீதம் பேர் சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
beauty
அதனால் பொதுவாகவே சென்சிடிவ் ஸ்கின்கொண்டவர்கள் சருமுத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் கெமிக்கல் கலந்த அழகு சாதனப்பொருள்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டிலுள்ள மஞ்சள், பால், தேன் இவற்றைப் பயன்படுத்தினாலே போதும். முகம் பளிச்சென அழகாக மாறிவிடும்.
ஸ்கின் டைப்
சென்சிடிவ் ஸ்கின் என பொத்தாம் பொதுவாகச் சொல்லிக்கொண்டு, அதற்கென ஏதாவது ஒரு க்ரீமை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. நம்முடைய ஸ்கின் சென்சிடிவ்வாக இருந்தாலும் அது எந்த வகையில் சென்சிடிவ் என்பதை முதலில் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக ஸ்கின் டைப் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். அவை
ஆயில் ஸ்கின் (எண்ணெய்ப்பசை அதிகம் கொண்ட தோல்)
சென்சிடிவ் ஸ்கின்
நார்மல் ஸ்கின்
என்ற அடிப்படையில்தான் தோல் பாகுபாடு செய்யப்படுகிறது.
கண்டறிதல்
மேல்சொன்ன மூன்று வகையான ஸ்கின் டைப்பில் உங்களுடைய ஸ்கின் எந்த மாதிரி தன்மையுடையது என்பதை முதலில் நீங்கள் கண்டறிய வேண்டும். அப்படி கண்டறிந்தால் தான், நம்முடைய முதல் வெற்றி. நம்முடைய சரியான ஸ்கின் டைப்பை கண்டுபிடித்துவிட்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். அதன்பின் அந்த சருமத்துக்குப் பொருத்தமுடைய பொருள்களைப் பயன்படுத்தி, நம்முடைய முகத்தை அழகாகவும் பொலிவானதாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
அழகு சாதனப்பொருள்கள்
எவ்வளவு தான் நீங்கள் காஸ்ட்லியான, பிராண்டட் அழகு சாதனப் பொருள்கள் வாங்கிப் பயன்படுத்தினாலும் அது உங்கள் சருமத்துக்கு சூட்டாகவில்லை என்றால் அது வேஸ்ட்.
உங்கள் தோல் சரியாக பொருந்தவில்லை என்றால், நீங்கள் தோல் பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். அதனால் உங்களின் சருமத்துக்கு எது பொருந்துகிறது என்று பார்த்து வாங்குங்கள். காசு புானால் சம்பாதித்துவிடலாம். சருமம் சிதைவுற்றால் என்ன செய்ய முடியும்?
மருத்துவ ஆலோசனை
எண்ணெய்ப்பசை கொண்ட சருமம், நார்மல் ஸ்கின் இரண்டுக்கும் நாம் செய்யவேண்டிய பராமரிப்பு முறைகள் வேறு. சென்சிடிவ் ஸ்கின்னுக்கான பராமரிப்பு முறை என்பது வேறு. அதனால் நீங்களாக எதையாவது தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருக்காமல் ஒரு நல்ல தெர்மலாஜிஸ்ட்டைப் பார்த்து ஆலோசனை பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் அழகு சாதனப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
சன் ஸ்கிரீன்
சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு நிச்சயம் சன் ஸ்கிரீன் அவசியமும் அடிப்படையும் கூட. சன் ஸ்கிரீன் இல்லாமல் நீங்கள் வெளியில் செல்லவே கூடாது. வெளியில் கிளம்பும்புாது சன் ஸ்கிரீன் தடவுவது மட்டும் போதாது. சிறிய காம்பாக்ட் சைஸில் ஒன்றை வாங்கி, எப்போதும் கூடவே வைத்திருங்கள். குறிப்பிட்ட இடைவெளியில் சன் ஸ்கிரீன் பயன்படுத்திக் கொண்டே இருங்கள்.
நீரோட்டம்
நம்முடைய உடல் ஆரோக்கியதத்துகு்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் நீர்ச்சத்து மிக அவசியம். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலை நீர்த்தன்மையோடு வைத்துக்கொண்டாலே சருமமும் எப்போதும் பொலிவுடன் இருக்கும். உடலுக்குப் போதிய நீர்ச்சத்தைப் பெறுவதற்கு வெறுமனே தண்ணீர் மட்டும்தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. பழச்சாறுகள், நீர்ச்சத்துக்கள் நிறைந்த ஆரஞ்சு, தர்பூசணி ஆகிய பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நீர்ச்சத்து, ஊட்டச்சத்து இரண்டையும் கொடுக்கும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.
சோதனை
நீங்கள் சருமத்துக்கு ஏதேனும் புதிய அழகு சாதனப் பொருள்களை முயற்சி செய்வதாக இருந்தால், முதலில் அது உங்கள் சருமத்தை பாதிக்காததாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பாருங்கள். சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு அழற்சி உண்டாகும். அதனால் கூடுமானவரை பக்க விளைவுகள் இல்லாத இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தப் பாருங்கள்.
பேட்ச் சோதனை
பேட்ச் சோதனை என்பது ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நீங்கள் வாங்கிய புதிய தயாரிப்புகளை உங்கள் காது மடல்களுக்கு பின்னல் ஒருவாரத்திற்கு தடவி பயன்படுத்தி பார்க்கவேண்டும்,அது உங்களுக்கு எந்தவித எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை என்றால்
நீங்கள் அதனை பயன்படுத்தலாம்