பெரியவர்களை விட குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால் அவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அடிக்கடி ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை அவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களை அடிக்கடி மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக சில வீட்டு வைத்திய முறைகளை கற்றுவைத்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகள் கொடுப்பதை காட்டிலும் வீட்டு மருந்துகள் கொடுப்பது நல்லது.
வீட்டு வைத்தியம் என்பது அனைத்து நேரத்திலும் கிடைக்கக்கூடியது, அதுமட்டுமின்றி பக்கவிளைவுகள் அற்றதாக இருக்கும். ஒருவேளை வீட்டு வைத்தியத்திலும் குணமாகவில்லை என்றால் உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் தூக்கிச்செல்லுங்கள். இங்கே குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவ குறிப்புகளை இங்கே பார்க்கலாம். சளி ஏற்பட்டால் செய்ய வேண்டிய வீட்டு மருத்துவங்கள்
தாய்ப்பால் தாய்ப்பாலை விட குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவம் எதுவும் இருக்க முடியாது. தாய்ப்பாலில் இயற்கையாகவே பல எதிர்ப்புசத்துக்கள் உள்ளது. சளியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது குழந்தைகளால் சரிவர தாய்ப்பால் குடிக்க இயலாது இருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். அதுவே அவர்களுக்கான முதலுதவி ஆகும்.
மூக்கில் தாய்ப்பால் விடுதல் மேலே கூறியது போல் தாய்ப்பாலில் பல எதிர்ப்பு சக்திகள் உள்ளது எனவே குழந்தைக்கு மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது குழந்தையின் மூக்கில் சில துளிகள் தாய்ப்பாலை விடுங்கள். இது அவர்களின் மூக்கடைப்பை எளிதில் சரிசெய்யும்.
உப்பு நீர் பல செயற்கை உப்பு நீர் கடைகளில் கிடைத்தாலும் நாம் வீட்டில் தயாரித்து கொள்வதே பாதுகாப்பானது. 250 மிலி தண்ணீரில் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும், தண்ணீர் ஆறியவுடன் குழந்தையின் மூக்கில் சில துளிகள் விடவும். இது உடனடியாக மூக்கடைப்பை குணப்படுத்தும்.
நீராவி நீராவி எப்பொழுதுமே பக்க விளைவுகளற்ற வீட்டு வைத்தியமாகும். இருப்பினும் குழந்தைகளால் இதனை நேரடியாக தாங்கிக்கொள்ள இயலாது. எனவே குழந்தை இருக்கும் அறையில் சற்று தள்ளி வைத்துவிட்டால் அவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இல்லையெனில் உங்கள் குளியலறையை சுடுநீரால் நிரப்பி போதுமான அளவு நீராவி உருவானவுடன் உங்கள் குழந்தையுடன் குளியலறையில் அமருங்கள், இது தாய்-சேய் இருவருக்குமே நல்லது.
மஞ்சள் மஞ்சள்தூள் இயற்கை வைத்தியத்தில் மிகவும் முக்கியமானது. மஞ்சள்தூளில் உள்ள ஆன்டிபாக்டீரிய பண்புகள் சளி மற்றும் இருமலுக்கான சிறந்த மருந்தாகும். உலர்ந்த மஞ்சள் வேரை வறுத்து அரைத்துக்கொள்ளவும், இதனை சுடுதண்ணீருடன் சேர்த்து குழந்தையின் மூக்கு மற்றும் மார்பு பகுதி மீது தேய்த்து விடுவது விரைவில் சளி தொல்லையிலிருந்து குழந்தையை குணப்படுத்தும்.
துளசி சாறு துளசி சளி மற்றும் இருமலின் மீது அற்புதமாய் செயல்படக்கூடியது. 250 மிலி தண்ணீரில் ஐந்து துளசி தழைகளை போட்டு கொதிக்கவைத்து குழந்தைக்கு கொடுக்கவும். குழந்தைகள் இதனை குடிக்க சிரமப்பட்டால் சில துளிகள் தாய்ப்பால் சேர்த்து கொடுக்கவும். இருமலை குணப்படுத்தும் வீட்டு மருத்துவங்கள்
எலுமிச்சை உங்கள் குழந்தையின் இருமலை குணப்படுத்த ஒரு எலுமிச்சை போதுமானது. உங்கள் குழந்தைக்கு எலுமிச்சை சாப்பிட பிடித்திருந்தால் எலுமிச்சை சாறில் சிறிது தேன் சேர்த்து கொடுங்கள். எலுமிச்சை பிடிக்கவில்லை எனில் கட்டாயப்படுத்த வேண்டாம்.
இஞ்சி மற்றும் உப்பு இதனை செய்வதற்கு 50கி இஞ்சியை நசுக்கி 1லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும் இதனுடன் 20கி உப்பு சேர்க்கவும். குழந்தைக்கு இருமல் அதிகரிக்கும் போது அவர்கள் பாதத்தை இந்த தண்ணீரில் மூழ்கும்படி செய்யவும். இதனை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் இருமல் விரைவில் குணமடையும்.
பூண்டு மற்றும் தேன் இரண்டு அல்லது மூன்று பூண்டுகளை எடுத்து நசுக்கி அதனுடன் சிறிது தேன் சேர்த்து கலக்கவும். இதனை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதிக நேரம் கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை தினமும் இரண்டு முறை குழந்தை தண்ணீர் குடிப்பதற்கு முன் 1/2 தேக்கரண்டி குடிக்க செய்யுங்கள்.
வெங்காயம் மற்றும் சர்க்கரை வெங்காயம் ஒரு இயற்கை மூலிகையாகும். இதிலுள்ள நோயெதிர்ப்புசக்தி குழந்தைகளை பல நோய்களில் இருந்து பாதுகாக்கும். ஒரு வெங்காயம், 20 கி சர்க்கரை மற்றும் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை உறித்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் வெங்காயத்தை எடுத்துவிட்டு தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கவும். தேவைப்பட்டால் பின்னர் கூட இதை உபயோகிக்கலாம் ஆனால் குழந்தைக்கு கொடுக்குமுன் சூடுபடுத்தி கொடுங்கள்.
முள்ளங்கி இதனை கேட்க சற்று வித்தியாசாக இருக்கலாம். ஆனால் முள்ளங்கியில் புரோட்டீன், மினரல்ஸ், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி என பல சத்துக்கள் உள்ளன. 5 அல்லது 6 துண்டுகள் முள்ளங்கியை தண்ணீரில் கொதிக்கவைத்து தினமும் இரண்டு முறை கொடுக்கவும். இதன் சுவை குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றால் சிறிது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொடுக்கவும். காய்ச்சலுக்கான வீட்டு வைத்தியங்கள்
வெங்காயம் தேய்த்தல் வெங்காயத்தின் சத்துக்களை பற்றி நாம் அறிவோம். ஆனால் அது காய்ச்சலை குணப்படுத்த கூடியது என்பது புதிய தகவலாக இருக்கலாம். வெங்காயத்தை இரண்டு அல்லது மூன்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு அதை குழந்தையின் பாதத்தில் நன்கு தேய்த்து விடவும். இது காய்ச்சலை விரைவில் குறைக்கும்.
செவ்வந்தி பூ டீ இது காய்ச்சலுக்கான சிறந்த மருந்தாகும். தண்ணீரில் சில செவ்வந்தி தேயிலைகளை போட்டு கொதிக்கவைத்து தென் சேர்த்து தினமும் இரண்டு முறை குழந்தைக்கு கொடுத்தால் விரைவில் காய்ச்சல் குறையும்.
முட்டையின் வெள்ளைக்கரு இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு சுத்தமான துணியை அதில் இரண்டு நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் அந்த துணியை குழந்தையின் பாதத்தில் ஒரு மணி நேரம் இருக்குமாறு வைக்கவும். இது உடனடியாக குழந்தையின்உடல் வெப்பநிலையை குறைக்கும்.
செவ்வந்தி பூ டீ இது காய்ச்சலுக்கான சிறந்த மருந்தாகும். தண்ணீரில் சில செவ்வந்தி தேயிலைகளை போட்டு கொதிக்கவைத்து தென் சேர்த்து தினமும் இரண்டு முறை குழந்தைக்கு கொடுத்தால் விரைவில் காய்ச்சல் குறையும்.
முட்டையின் வெள்ளைக்கரு இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு சுத்தமான துணியை அதில் இரண்டு நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் அந்த துணியை குழந்தையின் பாதத்தில் ஒரு மணி நேரம் இருக்குமாறு வைக்கவும். இது உடனடியாக குழந்தையின்உடல் வெப்பநிலையை குறைக்கும்.
தேங்காய் எண்ணெய் இது பல மருத்துவ குணநலன்களை கொண்டுள்ளது. எனவே குழந்தையின் உணவில் கணிசமான அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து வர அவர்களின் காய்ச்சல் குறைவதோடு நோயெதிர்ப்பு மண்டலமும் வலுப்பெறும்.
கடுகு எண்ணெய் மற்றும் பூண்டு கடுகு எண்ணெய் மற்றும் பூண்டு ஆகியவை காய்ச்சலைக் குறைக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது உண்மைதான். இது உடல் வலியை குறைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களையும் வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. இரண்டு தேக்கரண்டி கடு எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதை கலந்து சூடுபடுத்தவும். குழந்தை தூங்குவதற்கு முன் மார்பு, பாதம், முதுகென அனைத்து இடங்களிலும் மசாஜ் செய்யவும்.