26.5 C
Chennai
Thursday, Dec 19, 2024
letters1
அழகு குறிப்புகள்

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன?

ஒருவருடைய பெயரின் முதல் ஆங்கில எழுத்தை வைத்து அவர்கள் எப்படிபட்ட குணங்களை கொண்டவர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

A என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள்.
வாழ்க்கையின் மீது உங்களுக்கு வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அமையும்.

B என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்கள். நீங்கள் தைரியசாலி மற்றும் அதிக அன்பு உள்ளவராக இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வீர்கள்.

C என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பலதுறையில் அறிவுத் திறம் மிக்க திறமைசாலியாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் அதிக பணத்தை செலவழிப்பீர்கள். இயற்கையாகவே பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலில் சிறந்து விளங்குவீர்கள்.

D என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள்அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். நீங்கள் சுகாதாரத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதுடன், நம்பிக்கை மிக்கவராக பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

E என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள்.
நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். ஆனால் காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

 

F என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் திட்டமிடுவதில் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள்.

G என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள்.நீங்கள் மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பதால், உங்கள் போக்கில் வாழ விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை விரும்பாதவர்கள்.

H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தும் குணங்களை கொண்டவர்கள்.

I என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் உங்களுக்கு அமையும்.

J என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உங்களுக்கு தேவையானதை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பீர்கள்.

K என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர். திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

L என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உங்களின் வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள்.

M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும்.

N என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் துடிப்பு மற்றும் முயற்சி போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். அனைத்து விடயத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

O என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அறிவு மற்றும் கல்விக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். அதனால் நீங்கள் ஆசிரியர் அல்லது எழுத்தாளராக வருவீர்கள். ஒழுக்கத்தை விரும்பும் நீங்கள் உங்கள் துணையிடமும் அதை எதிர்ப்பார்ப்பீர்கள்.

P என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் திறமை, அறிவுக் கூர்மை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும்.

Q என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் நல்ல எழுத்தாளர், பேச்சாளராக இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர், இசையமைப்பாளர், நடிகர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும்.

R என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உண்மை, கருணை மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள்.

S என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள்.

T என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

U என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் அறிவுமிக்க தனித்துவமான சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவீர்கள். நீங்கள் ஒருவரை திருமணம் செய்வதற்கு பதில், பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.

V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள்.

W என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகுந்த பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். உங்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும்.

X என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே நீங்கள் மற்றவர்களிடம் சென்று அதிகமாக பேசுவீர்கள்.

Y என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள்.

Z என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பிறரை பற்றி நன்றாக புரிந்துக் கொள்ளும் குணத்தை உடையவர்கள். அதனால் உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருப்பார்கள். – Source: virakesari

Related posts

காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி இரகசியம் இதுதான் !!!

nathan

உங்களை அழகாக காட்ட எந்த மாதிரி உடைகளை அணியலாம்

nathan

குளிர்காலத்தில் பெண்களுக்கு சரும வறட்சி.. இதனை தடுப்பதற்கு சூப்பர் டிப்ஸ்

nathan

கவர்ச்சி உடையில் கடற்கரையில் குளுகுளு குளியல் போட்ட அமலாபால் – நீங்களே பாருங்க.!

nathan

சர்வைவரில் ஆபத்தில் சிக்கிய போட்டியாளர்! அலறி ஓடி ஆக்‌ஷனில் குதித்த அர்ஜூன்…

nathan

இதனால் தான் கணவரை பிரிந்தாராம் ரச்சிதா மகாலட்சுமி..!

nathan

கிர்ணி பழ பேஸ்பேக் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது

nathan

உங்களுக்கு உடல் சூட்டினால் இத்தனை பிரச்சனையா? அப்ப இத படிங்க!!

nathan

தன்னம்பிக்கை தருது மேக்கப்,tamil beauty tips

nathan