19 1442647948 5 lavenderoil
தலைமுடி சிகிச்சை

உங்கள் தலையில் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதற்கான சில தீர்வுகள்!!!

சிலருக்கு தலையில் அதிகம் வியர்க்கும். அப்படி அதிகம் வியர்ப்பதால் தலையில் கடுமையாக துர்நாற்றம் வீசும். இன்னும் சிலருக்கு தலையில் பொடுகு இருக்கும். பொடுகு தலையில் இருந்தால், அதுவும் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இப்படி தலை எப்போதும் துர்நாற்றத்துடன் இருந்தால், நம் அருகில் யாரும் வரமாட்டார்கள்.

எனவே பலரும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். ஆனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முடியை நறுமணத்துடன் வைத்துக் கொண்டால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இப்போது முடியை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்.

பேக்கிங் சோடா

உங்கள் முடியில் துர்நாற்றம் வீசினால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் பேக்கிங் சோடா எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதோடு, துர்நாற்றத்தையும் தடுக்கும். அதற்கு 3 பங்கு நீரில் 1 பங்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் அலசுங்கள்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-மைக்ரோபியல் பொருள் உள்ளதால், அது தலையில் பொடுகு இருந்தால், அவற்றை நீக்கி, தலையில் வீசும் துர்நாற்றத்தையும் தடுக்கும். அதற்கு டீ-ட்ரீ எண்ணெயை நீரில் கலந்து, அந்த நீரினால் தலையை சிறிது நேரம் மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து மைல்டு ஷாம்புவால் அலசுங்கள்.

தக்காளி

தக்காளி கூட தலையில் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்காப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அத்துடன் சிறிது லாவெண்டர் அல்லது ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையால் தலையை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், தலையில் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால், அவை ஸ்கால்ப்பில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் அதை சரிசெய்யும். அதற்கு தலைக்கு குளித்து முடித்த பின்னர், முடியை நன்கு உலர வைத்து, பின் இந்த எண்ணெயை தலைக்கு தடவ வேண்டும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குளிர வைத்து, பின் அந்நீரினால் தலைமுடியை அலச, தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.

19 1442647948 5 lavenderoil

Related posts

உணவின் மூலமே கூந்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

nathan

உங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா?

nathan

பொடுகு தொல்லையா?

nathan

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா? முடி செழித்து வளர 17 ஆயுர்வேத டிப்ஸ்!

nathan

கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை கலரிங்

nathan

தலைமுடி உதிர்கின்றதா? இதோ இயற்கை வைத்திய முறைகள்

nathan

க்ரே முடியை இயற்கையாகவே கருமையாக்க உதவும் 5 கருப்பு தேநீர் ரெசிப்பி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

nathan

சில இயற்கை வழிகள்…! முடியின் அடர்த்தியை அதிகரிக்க..

nathan