குழந்தைகளுக்கு கை சூப்பும் மற்றும் நகம் கடிக்கும் பழக்கங்கள் இருப்பதுண்டு. அவற்றை தவறு என்று சொல்லி வளர்ப்போம். அது உண்மை என்றாலும், இவ்வாறு வாயில் கை வைக்கும் குழந்தைகளுக்கு அலர்ஜி, தொற்றுக்கள் உண்டாவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அலர்ஜி நமது சுற்றுப் புற சூழலில் காணப்படும் அழுக்கு நிறைந்த பொருட்கள், வீட்டிலுள்ள தூசுகள், வளர்ப்பு பிராணிகள் ஆகியவற்றால் உண்டாகும்.
பொதுவாக கிருமிகள் உள்ளே சென்றால்தான் நோயெதிர்ப்பு செல்கள் செயல்படும். கைசூப்பும் குழந்தைகள் வீட்டிலுள்ள அனைத்து கிருமிகள் மற்றும் அழுக்குகள் நிறைந்த பொருட்களை தொட்டுவிட்டு, அப்படியே கைகளை வாயில் வைப்பார்கள்.
இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்பட்டு, அலர்ஜியை உண்டு பண்ணாமல் காக்கின்றன. இவ்வாறு இருக்கும் சூழ் நிலையில் தொடர்ந்து குழந்தைகள் கை சூப்புதல் அல்லது, நகம் கடிப்பதை செய்வதால், அவர்களுக்குள் அலர்ஜியை உண்டு பண்ணாமல் நோயெதிர்ப்பு செல்கள் தூண்டப்படுகின்றன என்று கனடாவில் ஒன்டாரியாவிலுள்ள மால்கம் என்ற பேராசிரியர் கூறுகிறார்.
ஆனால் இந்த பழக்கங்கள் இல்லாத குழந்தைகளுக்கு , சுகாதார நிலையில் இருப்பதால், எளிதில் நோயெதிர்ப்பு செல்கள் தூண்டப்படுவதில்லை. ஆதலால் திடீரென இந்த அழுக்கு, கிருமிகள் பாதிக்கும்போது, நோய் எதிர்ப்பு செல்களால் வேகம் காட்ட முடியாமல், அலர்ஜியை உண்டு பண்ணுகிறது.
இந்த ஆய்வு நியூஸிலாந்தில் நடத்தப்பட்டது. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 45 % குழந்தைகளுக்கு அலர்ஜி எனப்படும் அடாபிக் சென்சேஷன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் கை சூப்புதல் மற்றும் நகம் கடிக்கும் பழக்கமற்றவர்கள்.
ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒரு பழக்கம் கொண்ட குழந்தைகள் 40 சதவீதமே அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு பழக்கங்களும் இருக்கும் குழந்தைகளுக்கு 31 சதவீதமே அலர்ஜியால் பாதித்தவர்கள் என்று ஆய்வு கூறுகின்றது.
ஆனால் இந்த ஆய்வு ஆஸ்த்மா மற்றும் காய்ச்சல்களை தொடர்பு படுத்தி நடக்கவில்லை எனும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.