24.1 C
Chennai
Monday, Dec 16, 2024
cover 1542283658
முகப் பராமரிப்பு

உங்களுக்கு பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? அப்ப இத படிங்க!

அம்மை நோய் வந்து பல நாட்கள் ஆனபின்பும் கூட அதன் தழும்பு இருக்கும். உடலில் இருந்தால் கூட பெரிதாக பிரச்சினை இல்லை. ஆனால் நிறைய பேருக்கு முகத்தில் தழும்புகள் இருக்கும். அது நீண்ட நாட்களாக மறையாமல் அவர்களுடைய அழகையே கெடுத்து விடும்.

அம்மை தழும்புகள் மறையாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மைத் தழும்புகளை நம்முடைய வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்தே எந்த செலவும் இல்லாமல் மறையச் செய்துவிட முடியும். அது எப்படி என்று இங்கு காணலாம்.

அம்மைத் தழும்பு
அம்மை தழும்பு பல வருடங்களாக முகத்திலிருந்து மறையாமல் இருக்கும் பலரையும் நாம் பார்த்திருப்போம். இனிமேல் இப்படி யாரையாவது பார்த்தால் நீங்கள் இந்த மருந்தைப் பற்றி அவர்களிடம் சொல்லி, அதற்கு ஒரு வழி பிறக்கச் செய்யலாம். இதற்கு பெரிதாக ஏதும் தேவையில்லை. நம்முடைய வீட்டில் நாம் தினசரி சமையலுக்குப் பயன்படுத்துகின்ற சில பொருள்களே போதுமானவை. அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இங்கே காணலாம்.

தேவையான பொருள்கள்
கசகசா – 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் – 2 துண்டு
கறிவேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை

கசகசாவை எடுத்து தண்ணீரில் நனடகு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மஞ்சளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். சிலர் கசகசாவை அப்படியே ஊற வைக்காமல் பொடியாக அரைத்துக் கொள்வார்கள். அப்படியும் செய்யலாம். ஆனால் ஊற வைத்துப் பயன்படுத்தினால் சருமத்தில் நன்கு இறங்கும்.

கறிவேப்பிலையையும் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கசகசா மஞ்சள் கலவையை அதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை

கசகசாவை முகத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் பளபளக்கும். இந்த கலவையை அம்மை தழும்பு உள்ள இடத்திலோ அல்லது முகம் முழுவதுமோ அப்ளை செய்யலாம். குளிக்கச் செல்வதற்கும் அரை மணி நேரத்திற்கும் முன்பாக அப்ளை செய்துவிட்டு உலரவிட்டு, பின் குளிக்கலாம்.

இது காலையில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. இரவு நேரத்தில் கூட பேஸ்பேக் போல இதை போட்டு உலரவிட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவலாம். மிக வேகமாகவே முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் நீங்கிவிடும்.

மற்றொரு முறை

பப்பாளி பால் கூட தழும்புகளைப் போக்குவதற்கு மிகச்சிறந்த மருநுதாகப் பயன்படும். இரவு தூங்கச் செல்லும் முன் பப்பாளி பாலை பஞ்சில் தொட்டு, தழும்புகள் உள்ள இடத்தில் வைத்துவிட்டு, பின் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இதை அதிகமாகவும் பயன்படுத்தக் கூடாது.

cover 1542283658

Related posts

அழகான கருமையான புருவங்கள் வேண்டுமா ? அப்ப இத படிங்க!!

nathan

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க எழிய வழிமுறைகள்..

nathan

சரும சுருக்கங்கள் நீங்க சில டிப்ஸ்

nathan

முகப் பூச்சுகள் சிறிய குறிப்பு

nathan

வெயிலால் நிறம் மாறும் முகத்தை பளிச்சிட சூப்பர் டிப்ஸ்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மேக்கப்பில் உதடுகளை பெரிதாக்க முடியுமா?

nathan

திருமண நாளில் நீங்க பிரகாசமாக ஜொலிக்க என்ன பண்ணனும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சரும சுருக்கத்தை தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan