நமது வீட்டு சமையல் அறையில் இருக்கும் சீரகத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
உடல் எடையை குறைக்க
- இரவு முழுக்க சீரகம் ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் பாதி எலுமிச்சையை பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
- இல்லையென்றால் அப்படியே இந்த நீரை குடித்தும் வரலாம். இவ்வாறு 20 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை எளிமையாக குறையும்.
- மேலும் சீரக நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, சிறிது இலவங்க பொடியை சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மன அழுத்தம் குறைந்து, இன்சுலின் அளவு சீராக அதிகரிக்கும்.
சீரக தண்ணீரின் நன்மைகள்
உணவு செரிமானம்
- காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது.இது உடலின் அஜீரண பிரச்சனைகளை தடுத்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
நச்சுகளை அகற்ற உதவும்
- சீரக நீரில் ஆக்சிஜனேற்ற சக்தி அதிகமாக உள்ளதால் அது உடலில் இருந்து கிருமிகளை வெளியேற்றுகிறது. இதன் மூலம் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயலாற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
- சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதன் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் சீராக பணியாற்றுகிறது.1 டம்ளர் சீரக நீரில் ஒரு நாளுக்கு பரிந்துரைக்க பட்ட இரும்பு சத்து உட்கொள்ளலில் 7% பூர்த்தியாகிறது.
சுவாச மண்டலம்
- 1 டம்ளர் சீரக நீர் குடிப்பது, மார்பில் சளி நீர்த்துப்போக உதவுகிறது. அதன் ஆன்டிசெப்டிக் பண்புகள் சளி மற்றும் இருமல் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்ல உதவும். இதன் மூலம் சுவாசமண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.
தூக்கத்தின் தரம் அதிகரிக்கும்
- சீரக நீர் அருந்துவதால் தூக்கமின்மை என்னும் நோயை நம்மால் அதிக அளவில் குணப்படுத்த முடியும்.சீரகம் மூளையின் சக்தியை அதிகரிக்க உதவுவதோடு தூக்கத்தின் சிறந்த தரத்தையும் அதிகரிக்கும்.
சருமம்
- சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிப்பதற்கு சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது.
முடி உதிர்வு
- சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.