உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடல் எடையைக் குறைக்கவும் இது சிறந்த சிகிச்சை முறையாகும்.
வாழை இலையில் உள்ள “எபிகல்லோகாடெசின் காலேட்டின்” என்னும் ஒருவகையான உட்பொருள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், உடலில் நுழையும் நச்சுக் கதிர்களையும் வடிகட்டுகிறது.
உடலிலுள்ள திசுக்கள், தசைகள் மற்றும் உறுப்புகள் புத்துணர்ச்சியடைய, வாழை இலை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு உயிராற்றல் பாய அனுமதிக்கிறது.
வாழை இலைக் குளியல், தடிப்புகள், பூச்சி கடித்தல் மற்றும் தோல் எரிச்சல் போன்ற தோல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.
வாழை இலையிலிருந்து கசியும் பசையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் தோலில் ஏற்படும் காயங்களைக் குணமாக்க அது உதவுகிறது. அதனால்தான் தீ காயங்கள் ஏற்படும்போது, நோயாளிகள் மீது உடனடியாக வாழை இலை போர்த்தப்படுகிறது.
சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் பற்றும் உடல் வலிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.