அதிசய மூலிகை நாயுருவி, வயல்வெளிகளில், சாலையோரங்களில் என, நாம் காணும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும். மலைகளில் வளரும் நாயுருவி, பாறைகளை தனது வேரின் மூலம் துளைத்து மேலேறி வளர்வதால், கல்லுருவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் காணப்படும் இந்தச்செடிகளின் மேல் உள்ள முட்கள் சூழ்ந்த கதிர்கள், ஆடைகளில் ஓட்டும் இயல்புடையதால், யாரும் இதன் அருகில் செல்லமாட்டார்கள். ஆனால், நாயுருவி மனிதருக்கு செய்யும் அரும்பெரும் நலன்களை அறிந்தால், உடைகளில் என்ன, உடலில் கூட ஒட்டிக்கொள்ளட்டும் என நினைப்பார்கள். நாயுருவியின் பொதுவான மருத்துவ குணங்கள் சிறுநீரை அதிகரிக்கும், உடல் நலிவைப்போக்கும் மற்றும் உடலையும் மனதையும் பொலிவாக்கும். நாயுருவி பேஸ்ட் மற்றும் பிரஷ்
முன்னோர்கள் இன்றுபோல பேஸ்ட் மற்றும் பிரஷ் இல்லாத அந்த காலங்களில், நாயுருவி வேரையே, பிரஷாகவும் பேஸ்டாகவும் பயன்படுத்தி வந்தனர். எதனால் தெரியுமா? நாயுருவி வேர், பற்களின் வெற்றிலைக்கறைகளை நீக்கி, இயல்பான நிறத்தை அடைய வைப்பதுடன், பற்களில் படியும் தொற்றுக்களையும், அழித்து நீக்கிவிடும் தன்மைமிக்கது. சூடான மற்றும் குளிர் பானங்கள், புகை மற்றும் புலால் தவிர்த்து, நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நாயுருவி வேரில் பல் துலக்கிவர, மனம் தெளிவடைந்து, முகம் பொலிவாகும், பேச்சில் வசீகரம் பிறக்கும் என்கின்றன சித்த நூல்கள். சில மேஜிக் ஷோக்களில், மேஜிசியன் வாயில் ட்யூப்லைட்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை கடித்து, துப்புவதை பார்த்திருப்பீர்கள், அவர்களின் அத்தகைய அதிசயிக்கவைக்கும் திறனுக்கு செந்நாயுருவி இலைகளே காரணம். செந்நாயுருவி இலைகள் கண்ணாடிகளை அறுக்கும் தன்மை கொண்டிருப்பதால், அந்த இலைகளை வாயில் நன்கு மென்று வைத்துக்கொண்டே, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், பாறையையே துளைத்து செல்லும் வலுவுடையது செந்நாயுருவி என்று நாம் இந்தப்பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளுங்கள்
நாயுருவி அரிசி: நாயுருவி செடிகளில் உள்ள கதிர்களில் உள்ளவையே நாயுருவி அரிசி எனப்படுகின்றன. இவற்றை சேகரித்து, அரிசி போல சமைத்து சாப்பிட்டு வர, நாட்கள் ஓடினாலும் பசி எடுக்காது, உடலும் தெம்பாக இருக்கும் என்கிறது சித்த மருத்துவம். மீண்டும் பசியெடுக்க, மிளகு சீரகம் வறுத்து, நீரில் கொதிக்கவைத்து பருகிவரலாம். மேலும், இத்துடன் தினையரிசி, மூங்கிலரிசி சேர்த்து இடித்து, இந்த கலவையை தினமும், கஞ்சி செய்து பருகிவர, உடல் அபார ஆற்றல்மிகுந்த சக்தியைப்பெறும், உடல் பொலிவுண்டாகும். சித்தர்கள் அஷ்டகர்ம மூலிகை எனும் இந்த நாயுருவி மூலிகை மூலம்தான், உடல் சோர்வு பசி, நீங்கி காடு மலைகளில் இருந்தார்கள், இதனால் செந்நாயுருவிக்கு முனிவர்க்கெல்லாம் முனிவர் எனப்பொருள்படும் வகையில் மாமுனி எனும் பெயரும் உண்டு. நாயுருவியில் சிகப்பு வண்ணத்தில் செடிகளின் தண்டுகள் காணப்படுவதை பெண்பால் என்றும், அதையே உயரிய மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். மனிதனின் உடல் வியாதிகள் மட்டுமல்ல மன வியாதிகளுக்கும் மருந்தாகிறது.
அனைத்து பாதிப்புகளும் விலகும் : அஷ்டகர்ம மூலிகை எனப்படும் குணத்தால் செந்நாயுருவி வேரை, தொழில் வளம், செல்வம் சேர வசியப்பொருளாக, அக்காலத்தில் பயன்படுத்தினர். செந்நாயுருவி வேரை பாலில் கொதிக்கவைத்து, நிழலில் உலர்த்தி, பின்னர் தூளாக்கி, தினமும் இரவுவேளைகளில், பாலில் கலந்து பருகிவர, அனைத்துவகை மன பாதிப்புகள், இதய படபடப்பு மற்றும் தூக்கமின்மை வியாதிகள் யாவும் விலகிவிடும்.
பல்வலிக்கு : பற்களை பிடுங்கவேண்டிய கடும் பல்வலிக்கு, செந்நாயுருவி வேரை, பாறை உப்புடன் சேர்த்து பல்துலக்கிவர, பல் வலிகள் விரைவில் நீங்கிவிடும். சிறுநீரக பாதிப்புகளை செவ்வனே சரிசெய்யும் செந்நாயுருவி!
மாதவிடாய் கோளாறு : இளம் செந்நாயுருவி செடி இலைகளை சாறெடுத்து, நீரில் கலந்து சூடாக்கி தினமும் இருவேளை பருகிவர, சிறுநீரக பாதிப்புகள் யாவும் சீராகி, சிறுநீர் இயல்பாக பிரியும். சிறுநீரக கட்டிகள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்றவை நீங்கும். மேலும் மாதவிலக்கு கோளாறுகள், உடலில் அதிக நீர் கோர்ப்பது போன்றவை, சரியாகும்.
தீராத தலைவலிகள் தீர : செந்நாயுருவி வேரை, நல்லெண்ணையில் இட்டு, தைலம் போல நன்கு சுண்டியபின் சேகரித்துவைத்துக்கொண்டு, மூக்கில் சில துளிகள் விட்டுவர, தீராத தலைவலிகள் விரைவில் நீங்கிவிடும்
மலச்சிக்கல் வியாதிகள் தீர : நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்கள், செந்நாயுருவி இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, குடிநீராக பருகிவர, எத்தகைய நாள்பட்ட மலச்சிக்கலும் நீங்கி, உடனே பேதியாகி வெளியேறும்.
இருமல் நெஞ்சு சளி நீங்க : செந்நாயுருவி இலைகளை வாரமொருமுறை, சமையலில் கூட்டு போலவோ அல்லது கடைந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுவர, இருமல் குறைந்து, நுரையீரலில் தேங்கியுள்ள சளி, உடலில் இருந்து வெளியேறும்
ஜுரம் குணமாக : செந்நாயுருவி இலைகளுடன் இரு மடங்கு மிளகு சிறிது பனைவெல்லம் சேர்த்து, மையாக அரைத்து சாப்பிட்டுவர, எல்லாவகை ஜுரமும் விலகிவிடும். மிகத்தீவிர ஜுரத்துக்கு, செந்நாயுருவி இலைகளோடு ஜீரகம் சேர்த்து சூடாக்கி பருகிவர, கடும் ஜுரமும், மெல்ல விலகிவிடும்.
நெடுநாள் காயங்கள் ஆற : ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில், இடித்த செந்நாயுருவி இலைகளோடு, தேங்காயெண்ணை சேர்த்து சூடாக்கி பின்னர், அடிபட்ட காயங்கள், நெடுநாள் புண்கள், அவை சீழ்வடியும் நிலையில் இருந்தாலும், அவற்றின் மேல், இந்த எண்ணைக்கலவையை தினமும் சீரான இடைவெளியில் தடவிவர, காயங்கள் விரைவில் ஆறிவிடும்
பூச்சிக்கடி குணமாக : செந்நாயுருவி இலைகளுடன் துளசி இலைகளை கலந்து எடுத்து விரல்கடை அளவு தினமும் சாப்பிட்டுவர, விஷப்பூச்சிக்கடிகள் குணமாகும். மேலும், மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள், சரும வியாதிகள், பிறப்புறுப்பு வியாதிகள் போன்ற எண்ணற்ற வியாதிகளை, குணமாக்கி, மனிதனுக்கு நற்பலன்கள் அளிக்கும் இயல்புடைய “மாமுனி” என்று சித்தர்களால் போற்றப்படும் தெய்வீக மூலிகை, செந்நாயுருவி.
சில மருத்துவ குணங்கள் செந்நாயுருவி வேரைப் பொடியாக்கி, அத்துடன் சிறிது மிளகுப்பொடி,தேன் கலந்து சாப்பிட, வறட்டு இருமல் விலகி, சுவாசப்பிரச்னைகள் சீராகும். செந்நாயுருவி இலைச் சாற்றில் சிறிது பெருங்காயம் கலந்து சாப்பிட, வயிற்றுவலிகள் தீரும். செந்நாயுருவி அரிசியை, வீட்டில் அரிசி கழுவிய நீரில் இலேசாக கொதிக்கவைத்து பருகிவர, மூல வியாதிகள், மூளைக்கட்டிகள் மற்றும் உடல் கட்டிகள் குணமாகும். செந்நாயுருவி இலைகளை அரைத்து பற்று போல நெஞ்சின் மேல் தடவிவர, நெஞ்சு குத்தல் மற்றும் வலிகள் நீங்கும். செந்நாயுருவி சமூலம் எனப்படும் வேர், இலைகள் மற்றும் விதைகளை இடித்து தூளாக்கி அதை, இரசத்தில் கலந்தோ அல்லது தினமும் ஒருவேளை நீரில் இட்டு கொதிக்கவைத்தோ பருகிவர, அனைத்து வகை கண் வியாதிகள் மற்றும் அதிகமாக பசி எடுத்தல் போன்ற பாதிப்புகள் சரியாகிவிடும். காதில் சீழ் வடிதலை நிறுத்த, செந்நாயுருவி இலைச்சாற்றை, இரு சொட்டுகள் காதில் விட, காது சீழ்வடிதல் பிரச்சினைகள் விலகும்