29.3 C
Chennai
Monday, Sep 30, 2024
53.800.668.160.90 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா பற்களை வெண்மையாக்க இந்த ஒரு பொருள் போதுமே

மஞ்சளை வைத்து பற்களை எப்படி வெண்மையாக மாற்றுவது என்பது குறித்து இங்கு காண்போம்.

அதிகளவில் காபி பருகுதல், வயதாகுதல், பற்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களினால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன.

பற்களை வெண்மையாக மாற்ற பல் மருத்துவரை தவிர்க்க நினைப்பவர்கள், வீட்டிலேயே எப்படி பளிச்சென்று பற்களை மாற்றுவது என்பது குறித்து இங்கு காண்போம்.

மஞ்சள்

மஞ்சளில் விட்டமின் சி, மக்னீசியம், செலினியம் ஆகியவை பற்களுக்கு வலிமையை தரும். அத்துடன் பற்களை வெண்மையாக மாற்றவும் இது பயன்படும்.

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், பற்சொத்தையை போக்க உதவுகிறது.

எலுமிச்சை, மஞ்சள் மற்றும் உப்பு கலவை

எலுமிச்சை பற்களை வெண்மையாக்க பயன்படும் என்பதால், அதனுடன் உப்பு சேர்த்து பற்களின் மஞ்சள் நிறத்தை போக்கலாம்.

பயன்படுத்தும் முறை

மஞ்சள் கிழங்கை லேசாக வறுத்து, பொடி செய்துகொள்ள வேண்டும். ஒரு பவுலில் தேக்கரண்டி அளவு மஞ்சள் பொடி மாற்றும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். அவற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர், இந்த பேஸ்டை பற்களில் அப்ளை செய்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

மஞ்சள், தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா கலவை

பேக்கிங் சோடாவை இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் 4 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

2-3 நிமிடங்கள் பற்களை நன்றாக தேய்த்து கொண்டு, பிறகு இந்த கலவை கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். பின் சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை ஒரு வாரம் செய்து வர 1-2 முறை செய்து வந்தால் பற்கள் விரைவில் வெண்மையாகும்.

மஞ்சள், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு கலவை

கடுகு எண்ணெய்யை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இந்த கலவையை பேஸ்ட் போல பயன்படுத்தி வர வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை வைத்து தேய்த்து வந்தால் விரைவில் பற்கள் பளிச்சென்று மாறும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

மஞ்சள் மற்றும் வெண்ணிலா எஸன்ஸ்

அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி, சில துளிகள் வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை பேஸ்ட் போல் எடுத்துக்கொண்டு பல் தேய்க்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்கலாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts

தசைப்பிடிப்பு ஏன் ஏற்படுகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

இருமலை கட்டுப்படுத்தும் மாதுளம் பழம்

nathan

மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வல்லாரை வல்லமை

nathan

மகள் காதல் வசப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை

nathan

மூளையை பாதிக்கும் செயல்கள்

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பை வருவதற்கு இவை தான் காரணம்

nathan