24.3 C
Chennai
Wednesday, Dec 18, 2024
3 1527254599
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா தேனை முகத்தில் தடவலாமா?… தடவினா எனன ஆகும்?

அழகை ஆராதிக்காதவர்கள் யாராவது இந்த உலகத்தில் இருக்கிறார்களா? இல்லை. எல்லோருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. தோற்றத்தில் அழகாக இருப்பவர்களை கண் இமைக்காமல் பார்ப்பவர்கள் பலர் உண்டு.

அழகு என்பது ஒரு விதத்தில் நமக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு கருவியாக உள்ளது. இத்தகைய அழகு சற்று குறைந்து, நாம் சோர்வாக இருக்கும் நாட்களில் நம்மை கண்ணாடியில் பார்க்க நமக்கே பிடிப்பதில்லை. அழகு நிலையம் சென்று அழகு படுத்திக் கொள்ள நேரம் இல்லாதவர்கள் கூட வீட்டிலேயே எளிய முறையில் தேவதை போன்ற அழகைப் பெற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

சருமப் புத்துணர்ச்சி எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கையான முறையில் உங்கள் அழகை அதிகமாக்க, சருமத்தை பளபளக்க வைக்க இதோ இந்த குறிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வியல் முறை, சுற்றுசூழல் மாசு, தவறான உணவு பழக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை மீண்டும் புத்துணர்ச்சி அடையச் செய்து பருக்கள், கட்டிகள் போன்றவற்றைப் போக்க உதவும் ஒரு பேஸ் பேக்கை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

பால் தேன் பேஸ்பேக் உங்கள் சரும பிரச்சனைகளுக்கான ஒரு சிறந்த தீர்வு. பால் மற்றும் தேன் பேஸ்பேக். தேன் என்பது சரும பிரச்சனைகளுக்கு மிகவும் பழமையான ஆனால் மிகவும் சிறந்த ஒரு தீர்வாகும். கட்டிகள், பருக்கள் போன்றவற்றைப் போக்க தேன் மிகவும் உதவுகிறது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க உதவுவது தேனில் இருக்கும் மருத்துவ தன்மை. இது ஒரு ஈரப்பதத்தை தரும் பொருள் ஆகும். தேனுடன் பால் சேர்க்கும்போது இது ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு சருமத்தை சுத்தம் செய்கிறது. பால் ஒரு இயற்கையான க்ளென்சர் ஆகும். மேலும் பால் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. சரும பிரச்சனைகளை உண்டாக்கும் கூறுகளை எதிர்த்துப் போராடி, சருமத்திற்கு மென்மை மற்றும் மிருதுவான உணர்வைத் தருகிறது.

பால் மற்றும் தேனின் நன்மைகளை அறிந்து கொண்டோம். இப்போது இந்த பேஸ் பேக் செய்யும் முறையை அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் 1/2 அல்லது 1/3 கப் பால் 3-4 ஸ்பூன் ஆர்கானிக் தேன்

செய்முறை: ஒரு கிண்ணத்தில் பாலை சேர்த்துக் கொள்ளவும். அந்த பாலில் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இவை இரண்டும் சேர்ந்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் ஆகும்வரை நன்றாக கலக்கவும்.

ஒரு பிரஷ் அல்லது உங்கள் விரல் பயன்படுத்தி, இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். கன்னங்கள் மற்றும் பருக்கள் உள்ள இடத்தில் கவனமாக இந்த பேஸ்டை தடவவும். கழுத்து முன் பகுதி மற்றும் பின் பகுதியிலும் இந்த பேஸ்டை ஒரே சீராக தடவவும். முழுவதும் இந்த பேஸ்டை தடவியவுடன் 10-15 நிமிடங்கள் அப்படியே காய விடவும்.

இந்த பேக் முழுவதும் காய்ந்தவுடன் ஒரு ஈரமான ஸ்பாஞ் கொண்டு முகத்தில் உள்ள பேக்கை துடைத்து எடுக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். காய்ந்த காட்டன் துண்டால் முகத்தை ஒத்தி அடுக்கவும்.

குறிப்புகள் தேவைப்பட்டால், இந்த கலவையில் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ஒரு பிரெஷ் உணர்வு கிடைக்கும். முகத்தை துடைத்தவுடன் மாயஷ்ச்சரைசெர் பயன்படுத்த வேண்டாம். பால் ஒரு இயற்கையான மாய்ச்சரைசெர் ஆகும். அதுவே உங்கள் சருமத்தில் ஊடுருவ சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். அடுத்த சில மணி நேரங்களுக்கு முகத்தை கழுவ சோப் பயன்படுத்த வேண்டாம். நாம் பயன்படுத்திய இயற்கை மூலப்பொருட்கள் முகத்தில் வேலை செய்யட்டும்.

இதே பேஸ் பேக்கை உங்கள் உடலில் ஈரப்பதத்தை இழந்த மற்ற இடங்களில் குறிப்பாக, கை மூட்டு பகுதி, பாதம், கால் முட்டி, முதுகு போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். முகம் கழுவிய பின்னர், பஞ்சில் சிறிதளவு பன்னீர் ஊற்றி நனைத்து உங்கள் முகத்தில் ஒத்தி எடுக்கலாம். இதனால் உங்கள் முகம் புத்துணர்ச்சி அடைகிறது. வேறு எந்த ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். பன்னீர் மட்டுமே போதுமானது.

இயற்கை மாயச்ச்சரைஸர் இந்த பால் மற்றும் தேன் பேஸ் பேக் ஒரு இயற்கை மாயச்ச்சரைசெராக செயல்படுகிறது. இந்த பேஸ் பேக்கை பயன்படுத்திய ஓரிரு நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால், உங்கள் சருமம் பளபளப்பாக மாறுகிறது.

உதடு மற்றும் சரும வெடிப்பு கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு, உதடுகளில் உண்டாகும் வெடிப்பு போன்றவற்றைப் போக்க இந்த மாஸ்க் உதவுகிறது. குளிர்காலங்களில் மற்றும் மழைக்காலங்களில் சருமம் வறண்டு, பாத வெடிப்பு, மற்றும் உதடு வெடிப்பு உண்டாகிறது . இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் எளிய முறையில் அந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

சரும நிறமி பால் மற்றும் தேன் மாஸ்க் முகத்தில் உள்ள தழும்புகளை போக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுவதால், சரும நிறமிழப்பை கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் கட்டிகளைச் சிறந்த முறையில் போக்க உதவுகிறது. பருக்கள், வெட்டுகள் மற்றும் தழும்புகள் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. தட்டம்மை, சின்னம்மை போன்றவற்றால் உண்டாகும் தழும்புகள் கூட இந்த மாஸ்க் மூலம் மறைந்து போகும்.

வயது முதிர்வு வயது முதிர்வை தடுப்பது இதன் மறைமுக நன்மை ஆகும். தொடர்ச்சியாக இந்த மாஸ்கை பயன்படுத்துவதால், இளம் வயதிலேயே முகத்தில் உண்டாகும் கோடுகள், சுருக்கங்கள் போன்றவை தடுக்கப்படுகிறது. சருமத்தை இறுக்கமாக வைத்து இத்தகைய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

கட்டிகளுக்கு ஏற்றது முகத்தில் அடிக்கடி கட்டிகள் தோன்றி அதனைப் போக்க வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். தேன் மட்டுமே கட்டிகளைப் போக்க வல்லது . இதனுடன் பால் சேர்த்தால் இதன் பலன் இரட்டிப்பாகும் . அதிக பணம் செலவு செய்து அழகு நிலையத்திற்கு சென்று தற்காலிக அழகைப் பெறுவதற்கு மாற்றாக வீட்டிலேயே இயற்கை முறையில் நிரந்தர அழகைப் பெற இந்த பால் தேன் மாஸ்க் உதவுகிறது. இதனைப் பயன்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல மாற்றத்தை உணருங்கள். உங்கள் மாற்றத்தைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள்.

3 1527254599

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளை வினிகரைபயன்படுத்தி எப்படி உங்கள் சரும பிரச்சனைக்கு தீர்வு காணலாம்?

nathan

முகப் பொலிவுக்கு உதவும் நைட் க்ரீம்ஸ்!

nathan

2 வாரத்தில் முகத்தில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan

‘இந்த காய்கறிகள் உங்க சருமத்தை பொலிவாக மாற்றி ஒளிரச் செய்யுமாம்…!

nathan

தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவை!..

sangika

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…

sangika

முகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்

nathan

காலை சருமபராமரிப்பு செயல்முறை!…

sangika