வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒரு வகை தான் “செவ்வாழை பழம்”.
செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் ஒரு செவ்வாழை பழத்தில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது.இது உங்கள் உடலிற்கு முக்கிய தேவையான கரையும் நார்ச்சத்து ஆகும்.
இது வாழை வகைகளை காட்டிலும் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
அந்த வகையில் தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- தினமும் ஒரு செவ்வாழை பழம் உண்டு வருபவர்களுக்கு இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கும்.
- ஒரு செவ்வாயில் தினமும் தேவையான அளவில் 16% வைட்டமின் சி நிறைந்துள்ளது.
- தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை, இரத்த குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
- தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இளமையான மற்றும் மின்னும் சருமம் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
- செவ்வாழையில் உண்டுவந்தால் உங்களின் கண் ஆரோக்கியம் மேம்படும். மேலும் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்பார்வை திறனை அதிகரிக்கும்.
- விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு தங்களின் வேலையினை தொடர்ந்தால் அவர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.