சூப் உடலுக்கு மிகவும் நல்லது. இதுவரை எத்தனையோ சூப் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடிப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இந்த கீரையைக் கொண்டு சூப் செய்து குடித்தால், உடலினுள் நீரினால் ஏற்பட்ட வீக்கமானது குறையும்.
எனவே இந்த கீரை கிடைத்தால், தவறாமல் அதனைக் கொண்டு சூப் செய்து குடியுங்கள். சரி, இப்போது அந்த மூக்கிரட்டை கீரை சூப் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Mookirattai Keerai Soup
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
நீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.