கர்ப்ப காலத்தில் சாக்லெட் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியானால் அது மிகவும் நல்லது. ஏனெனில் ஆய்வு ஒன்று சாக்லெட் சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறது. அதிலும் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் தான் அதிக நன்மைகள் கிடைக்கும். இப்போது சாக்லெட்டை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
கர்ப்பிணிகள் சாக்லெட்டை சாப்பிட்டால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உதாரணமாக, சாக்லெட்டில் உள்ள ஒரு பொருள் கர்ப்ப காலத்தில் பெண்கள் மன அழுத்தத்தில் ஈடுபடாதவாறு பாதுகாக்கும். இதுப்போன்று பல பிரச்சனைகளுக்கு சாக்லெட் நிவாரணம் அளிக்கிறது.
சரி, இப்போது கர்ப்பிணிகள் ஏன் கர்ப்ப காலத்தில் சாக்லெட் சாப்பிடலாம் என்பது பற்றி பார்ப்போம்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்
கொக்கோ என்னும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லெட்டில் தியோபுரோமைன் இருப்பதால், அவை கர்ப்பிணிகளின் உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, தியோபுரோமைன் கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவிப் புரியும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
சாக்லெட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில ப்ரீ ராடிக்கல்களின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு தரும். இதனால் வயிற்றில் வளரும் சிசுவானது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக வளரும்.
இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம்
சாக்லெட்டில் இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் அதிக அளவில் நிறைந்திருப்பதால், இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டு வந்தால், அவர்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவானது சீராக பராமரிக்கப்படும்.
இதய நோயை தடுக்கும்
டார்க் சாக்லெட்டை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், அவர்களின் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
டார்க் சாக்லெட்டில் சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் அளவாக உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.
மன அழுத்தத்தைக் குறைக்கும்
டார்க் சாக்லெட் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதாலும், அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டிருப்பதாலும், இவை கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.