26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
dbbc0ac061dae8e15199eda1153fcc
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்…!!

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வருவது நல்ல பலன்களை தரும்.
எலுமிச்சை பானம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள் எலுமிச்சை – 6, தண்ணீர் 1/2 லிட்டர், தேன் – தேவையான அளவு.
தயாரிக்கும் முறை: முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். 10-15 நிமிடம் ஆறவைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக்கொண்டு, ஒரு சிறிய டம்ளரில் அந்த நீரை ஊற்றி கொஞ்சம் தேன் கலந்து குடிக்கவும்.

* இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
* தினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
* செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.

* தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.
* இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது, எனவே இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியும்.

Related posts

உங்க கண்ணைக் காத்திட எளிய வழிகள்!அவசியம் படிக்க..

nathan

ஆண்களிடம் பழகும் பெண்கள் – உஷார்!

nathan

தெரிந்துகொள்வோமா? மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை …

nathan

40 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் எடையை குறைக்கணுமா?உங்களுக்காக டிப்ஸ்!!

nathan

நாவூறும் யாழ்பாணத்து ஒடியல் கூழ் செய்முறை விளக்கம்

nathan

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதிலே மூட்டு வலி வருவதற்கான காரணம் என்ன?

nathan

ஆண்மை பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை வயாகரா அமுக்கிராகிழங்கு

nathan

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

nathan

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan