வெங்காயம் மற்றும் தேன் இரண்டிலும் நிறைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அதைக் கொண்டு சிரப் செய்வது உங்க சளியைபோக்க பெருமளவில் உதவி செய்யும்.
இந்த வெங்காய தேன் சிரப்பை சலதோஷத்திற்கு எதிராக எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தயாரிக்கும் முறை
ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
இப்பொழுது அதை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் சில துளிகள் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவற்றை குறைந்த தீயில் இரண்டு மணி நேரம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அந்த சாற்றை வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் சேகரித்து கொள்ளுங்கள். வேண்டுமானால் பச்சை வெங்காயத்தை கூட தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.