ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் முட்டைக்கோசை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். அதில் இருக்கும் சத்துக்களை காண்போம்!
உடல் பருமனை குறைக்கும் முட்டைக்கோஸ் ஜூஸ்
ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் முட்டைக்கோசை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். அதில் இருக்கும் சத்துக்களை காண்போம்!
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் முட்டைக்கோசில் அதிகம் இருக்கிறது. அவை இதய துடிப்பு, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகின்றன.
* உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் முட்டைக்கோஸை ஜூஸாக தயார் செய்து பருகலாம். அது உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி, உடல் எடை குறைய வழிவகுக்கும்.
* தினமும் காலையில் முட்டைக்கோஸுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தாலும் உடல்பருமன் குறையும்.
* முட்டைக்கோஸை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
* முட்டைக்கோஸில் போலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. இது ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க துணைபுரியும். ரத்த சோகையையும் கட்டுப்படுத்தும்.
* மலச்சிக்கல் பாதிப்புக்கும் முட்டைக்கோஸ் நிவாரணம் தரும். முட்டைக்கோஸுடன் மிளகு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சூப் செய்து இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* கண்ணின் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும் ஆற்றல் முட்டைக் கோஸுக்கு இருக்கிறது. தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் பார்வை மேம்படும் வாய்ப்பு இருக்கிறது.
* முட்டைக்கோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன் போன்ற ரசாயன மூலக்கூறுகள் இருக்கின்றன. அவை புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டவை.
* பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடுசெய்யும் தன்மை முட்டைக்கோஸுக்கு உண்டு.
* அஜீரண கோளாறு, தொற்றுநோய் பாதிப்பு, முகப்பரு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியை போக்கும் தன்மை கொண்டது.
* முட்டைக்கோஸை நறுக்கி அதனுடன் தண்ணீர், உப்பு கலந்து கொதிக்கவைத்து, அந்த தண்ணீரை குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்.