அசைவ உணவு சாப்பிடுவோரைக் காட்டிலும் சைவ உணவு உண்போரையே பக்கவாதம் பாதிப்பதாகவும், குறிப்பாக ரத்தக் கசிவு பக்கவாதம் வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் தமனியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பின் மூளையில் ரத்தம் கசியும் என பிரிட்டிஷ் மெடிக்கல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது தொடர்ந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவோருக்கு கொழுப்புச் சத்து குறைபாடும், வைட்டமின் B12 குறைந்த அளவில் இருப்பதும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வேகன் டயட் மற்றும் சைவ உணவிற்கு பலரும் மாறிவரும் நிலையில் இந்த செய்தி பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பக்கவாதம் மட்டுமன்றி 22 சதவீதம் இதய நோய்கள் வரும் ஆபத்தும் இறைச்சி தவிர்த்து மீன் மட்டும் சாப்பிட்டு வந்தால் 13 சதவீதமாக இருக்கும் என கூறியுள்ளனர். அதோடு குறைவான உடல் எடை, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்களும் சைவம் சாப்பிடுவோருக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமன்றி ஊட்டச்சத்து நிபுணர்களும் வேகன் எனப்படும் பச்சைக் காய்கறிகளை மட்டுமே உண்டு வரும் போக்கு அதிகரித்திருப்பது பெரிய ஆபத்தானது. அது அடுத்த தலைமுறைக்கு ஐக்யூ அளவை குறைக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் பச்சைக் காய்கறிகளில் பல ஊட்டச்சத்துகள் இருப்பதில்லை. அந்த உணவு சீரான உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்துகளை தருவதாக இல்லை என எச்சரிக்கின்றனர்.