28.2 C
Chennai
Monday, Dec 30, 2024
yuklikg
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

உங்களுக்கு சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய்…

சிகைக்காய் வாங்க வேண்டும் என்றாலே கிடைப்பதென்னவோ நுரை வரும் பாக்கெட் சிகைக்காயும், செயற்கை முறையில் தயார் செய்து அடைக்கப்பட்ட சிகைக்காய் ஷேம்பு தான். ஆனால் பாரம்பரிய சிகைக்காய் கிடைத்தால் அதை அரைத்து பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

கிராமப்புறங்களில் வளர்ந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு கண்டிப்பாக சிகைக்காயில் குளித்த அனுபவம் இருக்கும். வார இறுதி நாட்களில் குறிப்பாக சனிக்கிழமை ஆனாலே நம் பாட்டியோ அம்மாவோ நல்லெண்ணெய் தேய்த்து அரைப்பு தேய்த்துவிட்டு சிகைக்காயில் தான் குளிக்க சொல்வார்கள்.
அதனால் தான் அப்போதெல்லாம் 50 எட்டினாலும் நம் அம்மா அப்பாவுக்கு எல்லாம் இன்னும் நரை முடி பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்றோ மாறிப்போன வாழக்கை முறைகளின் காரணமாக பொடுகு தொல்லை, பேன், முடி கொட்டுதல், சொட்டை விழுதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
yuklikg
சிகைக்காய் முடிக்கு எவ்வாறு உதவுகிறது? இதை தலைக்கு தேய்த்து குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? தெரிஞ்சுக்கலாம் வாங்க

இயற்கையாக கிடைக்கும் சிகைக்காய் உங்கள் தலைமுடியை மென்மையாக்கி அழகான மிருதுவான தோற்றத்தை வழங்கும்.
சிகைக்காயின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டது என்பதால் உங்கள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியைத் தடுக்கும். தவறாமல் பயன்படுத்தினால் பொடுகுப் பிரச்சினையைக் குணப்படுத்த உதவும்.
சிகைக்காய் முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதன் விளைவாக வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி கிடைக்கும். அதோடு முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.
எண்ணெய் தேய்த்துக்கொண்டு கழுவாமல் இருக்கும் உச்சந்தலையில் சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் உச்சந்தலைக்கு போஷாக்கு கிடைக்கும். தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
சிகைக்காய் தேய்த்து குளிப்பதால் இளமைப் பருவத்திலேயே நரை முடி தொல்லை இருக்காது. இது உங்கள் தலைமுடியின் இயல்பான இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
பேன் தொல்லை இருந்தால், சிகைக்காய் தேய்த்து குளித்தால் குணமாகும்.
தலை அரிப்பினால் தேய்த்து தேய்த்து தலையில் சிறு சிறு காயங்கள் ஆகியிருந்தால் சிகைக்காய் தேய்த்து குளிக்கும்போது நாளடைவில் அந்த பிரச்சினை குணமடையும்.
ஒரு சிகைக்காய் ஹேர் பேக் ஒரு சூடான நாளில் நிவாரணம் அளிக்கலாம், தலைவலியைப் போக்கலாம் அல்லது இனிமையான ஹேர் பேக் போல செயல்படலாம்.
உங்களுக்கு சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய் தேய்த்து குளித்தால் முடி சிக்கல் விழாமல் நன்றாக இருக்கும்.
முடிந்தவரை இயற்கையாக நம் முடி ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.

Related posts

நரைமுடியை கருமையாக்க சில டிப்ஸ்!…

nathan

உங்களுக்கு பேன் தொல்லை இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள டிப்ஸ்…

nathan

இளநரையைத் தடுக்கும் மருந்து!

nathan

உங்களுக்கு எப்ப முடி வெட்டணும் தெரியுமா…?

nathan

உங்களுக்கு தெரியுமா எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? அப்ப இத படிங்க!

nathan

கறிவேப்பிலையுடன், நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தலைமுடியை தினமும் கழுவலாமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வைக்க வாரத்திற்கு 2 முறை இத தடவினாலே போதும்!

nathan