ஒரு சில ஆயுர்வேத பானங்களை தொடர்ந்து அருந்துவதன் மூலம், ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கலாம்.
எந்த வகையான ஆயுர்வேத பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
மாதுளை மற்றும் கிரேப் புரூட்
மாதுளை, கிரேப் புரூட் ஆகியவற்றை அரை கப் அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை வடிகட்டி, அதனுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்து வர வேண்டும்.
இந்த பானம் மிகவும் சிறந்த பானமாகும். இதன்மூலம் அடி வயிற்றில் கொழுப்புகள் சேராமல் தடுக்கப்படும்.
ஆளி விதை காபி
உடல் எடையை குறைக்க உதவும் மற்றொரு பானம் ஆளி விதை காபியாகும். சூடான நீரில் ஒரு தேக்கரண்டி காபியை கலந்துகொள்ள வேண்டும். அடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி ஆளி விதை மற்றும் டார்க் சாக்லட் சேர்த்து, நன்றாக கலந்துகொண்டு வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த காபியை தினமும் குடித்து வர, ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்.
வெள்ளரி பானம்
உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் வெந்தயம், வெள்ளரி ஆகியவற்றை வைத்து பானம் தயாரித்துக் கொள்ள வேண்டும். இதற்காக இரண்டு தேக்கரண்டி வெந்தயம், அரை கப் வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெந்தயத்தை அரை கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி, சிறிது உப்பு சேர்த்து குடித்து வர நல்ல பலனை காணலாம்.
இளநீர் மற்றும் அன்னாசி பானம்
ஒரு கப் இளநீர், அரை கப் அன்னாசி, அரை கப் கருஞ்சீரக விதைகள் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் அன்னாசி பழத்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து, பின் வடிகட்டி கொள்ள வேண்டும்.
இறுதியாக சிறிது உப்பை அதனுடன் சேர்த்து குடித்து வர வேண்டும். இந்த பானம் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி, செரிமான கோளாறை குணப்படுத்தும். அத்துடன் ரத்தம் உறைவதையும் தடுத்து, சீரான உடல் எடையை தரும்.
தக்காளிச்சாறு
ஒரு கப் தக்காளியை நன்கு அரைத்து, அதனை வடிகட்டி பின் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாற்றினை அதனுடன் கலந்து குடித்து வர வேண்டும். இந்த பானத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
அத்துடன் அடி வயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் உடலில் தேவைக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க இந்த பானம் பயன்படும்.
பப்பாளி இலவங்க சாறு
ஒரு கப் பப்பாளி, அரை தேக்கரண்டி இலவங்க பொடி, சிறிது உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பப்பாளியை நன்றாக அரைத்து, வடிகட்டி பின்னர் உப்பு மற்றும் இலவங்க பொடியை சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும்.
இந்த பானம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதால், தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். மேலும் சர்க்கரையின் அளவை சமமான அளவில் வைத்துக்கொள்ள இது உதவும்.
கோதுமை புல் மற்றும் திராட்சை ரசம்
அரை கப் திராட்சை, ஒரு கப் கோதுமை புல் மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கோதுமை புல்லை நன்றாக நறுக்கிக் கொண்டு அரைத்து, பிறகு திராட்சை சேர்த்து மீண்டும் அதனை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை வடிகட்டி, சிறிது நீர் சேர்த்து கொள்ள வேண்டும். இறுதியில் உப்பை அதில் சேர்த்து குடித்து வர வேண்டும். இந்த பானம் கொழுப்பு, கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றை முற்றிலும் கரைத்து விடும்.
கிரீன் டீ
கிரீன் டீ இலைகளுடன் புதினாவை சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும். இதன்மூலம் கொழுப்புகள் விரைவாக குறையும்.
எலுமிச்சை டீ
நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர வேண்டும். இதன்மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வேகமாக குறையும்.