24.3 C
Chennai
Wednesday, Dec 18, 2024
zeye 16 1479287430
முகப் பராமரிப்பு

உங்களுக்கு எண்ணெய் வழியும் இமைகளா? அதை சீராக்க உதவும் 6 குறிப்புகள்!

எண்ணெய் வழியும் கண் இமைகள். குளிர்காலத்தில் இவைகளால் ஏற்படும் பிரச்சனைகள் எண்ணிலடங்கா.

கோடை காலத்தில் உங்களின் இரவுகள் எண்ணெய் வழியும் கண் இமைகளால் தூக்கமில்லா இரவுகளாக மாறி விடும். எனினும், வீட்டு வைத்தியத்தை உபயோகித்து நீங்கள் உங்களின் எண்ணெய் வழியும் கண் இமைகளை சிறப்பாக சமாளிக்க முடியும்.

இவை அனைத்தையும் தவிர்க்க, நாங்கள் இங்கே உங்களுக்காக எண்ணெய் வழியும் கண் இமைகளை சீராக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

அவைகளைப் பயன்படுத்தி உங்களின் அழகை மேழும் அழகு படுத்திக் கொள்ளுங்கள்.

விச் ஹாஜல் சாறு : ஒரு பஞ்சினால் விச் ஹாஜல் சாறை ஒரு சில துளிகள் விட வேண்டும். அதன் பின்னர் அதை உங்களின் கண் இமைகள் மீது மெதுவாக துடைக்கவும். இது உலரும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் உங்களின் வழக்கமான கண் ஒப்பனைகளை தொடர்ந்து செய்யவும்.

பால் : பஞ்சினால் காய்ச்சாத பாலில் தோய்த்த பின் அதில் உள்ள அதிகமாக உள்ள பாலை பிழிந்து வெளியே எடுக்கவும். அதன் பின்னர் அதை உங்களின் கண் இமைகள் மீது மெதுவாக துடைக்கவும். பால் காயும் வரை காத்திருந்து அதன் பின்னர் ஒரு ஈரத் துணியால் துடைத்து எடுக்கவும்.

தக்காளி புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட ஒரு தேக்கரண்டி தக்காளி சாறை எடுத்து அதை சுமார் 5 நிமிடங்கள் நிதானமாக குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரூட்டவும். அதன் பின்னர் அதைப் பயன்படுத்தி உங்களின் மூடப்பட்ட கண் இமைகள் மீது மசாஜ் செய்யவும். அதன் பின்னர் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஓய்வெடுங்கள். தக்காளிச் சாறு நன்றாக உலர்ந்த பின்னர் அதை தண்ணீர் வைத்து சுத்தமாக துடைத்து எடுக்கவும்.. நீங்கள் வித்தியாசத்தை உணரும் வரை இதை தினசரி பின்பற்றுங்கள்.

பருத்தி துண்டு பருத்தி துண்டு, செயற்கை இழைகளை விட தோலில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் உடையது. உங்களுடைய வழக்கமான சுத்தப்படுத்திகளை பயன்படுத்தி உங்களின் கண் இமைகள் உட்பட உங்களின் முகத்தை கழுவிய பிறகு, ஒரு சுத்தமான பருத்தி துண்டை வைத்து உங்களின் முகத்தை நன்கு துடையுங்கள். இது உங்களின் கண் இமைகளில் வழியும் எண்ணெயை நீக்கி விடும்.

முட்டை கரு : ஒரு கிண்ணத்தில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை நன்கு அடித்து ஒரு பஞ்சுபோன்ற நிலைத்தன்மை வரும் வரை நன்கு கலக்கவும். கண்களை மூடி, ஒரு தூரிகையை பயன்படுத்தி, மெதுவாக இந்தக் கலவையை கண் இமை மீது பரப்பவும். அது காயும் வரை காத்திருந்து அதன் பின்னர் ஒரு ஈரமான பருத்தி திண்டு வைத்து சுத்தமாக துடைப்பது எடுக்கவும். இதை வாரம் இருமுறை செய்து பார்க்கவும்.

பன்னீர் : பன்னீர் ஒரு சிறந்த டோனர் ஆகும். ஒரு பஞ்சினால் பன்னீர் ஒரு சில துளிகள் எடுத்து, கண் இமைகள் உட்பட உங்கள் கண்களை சுற்றி உள்ள பகுதிகளை மசாஜ் செய்யவும். அது இயற்கையாக தோலால் உறிஞ்சப்பட்டு விடுகின்றது. இதை ஒவ்வொரு நாளும் முயற்சி செய்ய வேண்டும். உங்களிடன் எண்ணெய் இமைகளை சீராக்க உதவும் ஏதேனும் குறிப்புகள் இருந்தால் அவைகளை கீழே உள்ளே கருத்து பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

zeye 16 1479287430

Related posts

பெண்களே உங்க முகத்தில் உள்ள கருவளையத்தை போக்கணுமா? இதோ எளிய நிவாரணம்

nathan

கருவளையம், சரும கருமை போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவடைய செய்யும் தக்காளி சாறு…!

nathan

உங்களின் சோர்ந்த முகத்தை பளிச்சென்று மாற்றும் இந்த 3 ஸ்க்ரப் உபயோகித்திருக்கிறீர்களா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர்ந்து இழுக்கும் அழகை பெற இவற்றை செய்தாலே போதும்..

nathan

உங்களுக்கு பிரகாசமான முகம் வேண்டுமா? ‘ஆல்கஹால் ஃபேசியல்’ முயன்று பாருங்கள்!!!

nathan

முகப்பொலிவுப் பெற இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய அழகுக் குறிப்புகள்

nathan

காய்கறி ஃபேஷியல்:

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் பீச் பழ ஃபேஸ் பேக்

nathan