இந்த ஆசனம் மூளைக்கு செல்லுமூ இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்.
இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் சிரசாசனம்
செய்முறை :
தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும்.
குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
இந்த ஆசனத்தை முதலில் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். நன்றாக பழகிய பின்னரே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை செய்யும் போது ஆசிரியரின் துணை இல்லாமல் இதை செய்யக்கூடாது.
பயன்கள் :
தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.