27.6 C
Chennai
Tuesday, Jan 14, 2025
2 tired 16
மருத்துவ குறிப்பு

இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!

இந்த ஹைபோக்ஸீமியா கடுமையானதாக இருக்கலாம், அவசர நிலை காரணமாக திடீரென ஏற்படலாம் அல்லது சிஓபிடி போன்ற நீண்ட கால சுகாதார நிலை காரணமாகவும் நிகழலாம். ஆனால் ஒருவரது இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால், நமது உடல் நமக்கு பல வழிகளில் தெரியப்படுத்தும். கீழே இரத்தத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லை என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பலவீனம் அல்லது தலைச்சுற்றல்
பலவீனம் அல்லது தலைச்சுற்றல்
இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால் வெளிப்படும் ஒரு பொதுவான அறிகுறி வழக்கத்தை விட பலவீனமாக இருப்பது அல்லது தலைச்சுற்றல் ஏற்படுவது. உங்களுக்கு இதுப்போன்று எப்போதாவது நடத்துள்ளதா? ஆம் என்றால், உடனே அதற்கு இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்று அர்த்தமல்ல. பெரும்பாலான மக்கள் உட்கார்ந்து வேகமாக எழுந்தால் மயக்கம் வருவதை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் ஒருவரது இரத்தத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லாமல் இருந்தால், இம்மாதிரியான பிரச்சனையை சிறு வேலை செய்தாலும் தினந்தோறும் அனுபவிப்பார்கள்.

நாள்பட்ட களைப்பு அல்லது சோர்வு

நாள்பட்ட களைப்பு என்பது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் இரத்தத்தில் இல்லை என்பதற்கான குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். ஒருவர் சோர்வாவதற்கு பல்வேறு வகையான உணர்வுகள் உள்ளன. ஆனால் ஹைபோக்ஸீமியாவுடன் தொடர்புடைய சோர்வு நாள்பட்டது மற்றும் ஒருபோதும் முடிவடையாது. மேலும் ஒருவர் வழக்கத்தை விட வேகமாக சோர்வடைந்தால், அது இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

பதட்டம் அல்லது வேகமான இதயத் துடிப்பு

ஒருவரது இதயம் வேகமாக துடிக்கும் போது தான் பதட்ட உணர்வு எழுகிறது. எப்போது இதயம் உடலின் அனைத்து உறுப்புக்களும் ஆக்சிஜனைப் பெற கடுமையாக உழைக்கிறதோ, அப்போது இதயம் வேகமாக துடிக்கிறது. உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இருந்தால் இம்மாதிரியான நிலை ஏற்பட வாய்ப்பில்லை. அது இல்லாத போது இந்நிலை ஏற்படுகிறது.

மூச்சுத் திணறல்

உடலில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லாத போது சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்கும் உள்ளிழுப்பதற்கும் உங்களுக்கு சிரமமாக இருக்கும் போது, உங்கள் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இரத்தத்தில் ஆக்சிஜன் இல்லாதவர்கள், கடுமையான செயலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மூச்சுத்திணறலை சந்திக்க நேரிடும்.

தலைவலி மற்றும் மனக்குழப்பம்

சிறிது நேரம் மூச்சை இழுத்துப்பிடித்திருந்தாலும், பலர் தலைவலியை அனுபவிப்பார்கள். இதன் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் தலைவலி வந்தாலே, இரத்தத்தில் ஆக்சிஜன் இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால் குழப்பம், தலைச்சுற்றல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவற்றுடன் சேர்ந்து, தலைவலி வந்தால், உடலுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே இம்மாதிரியான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடலில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

இப்போது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் சில உணவுகளைக் காண்போம்.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது ஹைபோக்ஸீமியாவிலிருந்து மீள உதவும். உடலில் இரும்புச்சத்தில் குறைபாடு ஏற்படும் போது தான், அது உடலில் ஆக்சிஜன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்த பிரச்சனையை உணவுகளின் மூலம் சரிசெய்ய முயற்சி செய்யலாம். கீழே உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரித்து, ஆக்சிஜன் அளவை மேம்படுத்த உதவும் உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

விலங்கு புரோட்டீன்கள்

* முட்டைகள்

* மாட்டிறைச்சி

* ஆட்டிறைச்சி

* சிக்கன்/கோழி இறைச்சி

* வான்கோழி இறைச்சி

* பன்றி இறைச்சி

கடல் உணவுகள்
கடல் உணவுகள்
* கிளாம்கள் (Clams)

* இறால்

* டுனா

* மத்தி

* கானாங்கெளுத்தி

* சிப்பிகள்

* ஸ்காலப்ஸ் (Scallops)

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
* டோஃபு

* கிட்னி பீன்ஸ்

* கொண்டைக்கடலை அல்லது சுண்டல்

* கருப்பு பீன்ஸ்

* தட்டைபயறு

* பிண்டோ பீன்ஸ்

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகள்
* பசலைக்கீரை/பாலக்

* டேன்டேலியன் கீரை

* பீட்ரூட் கீரை

* கேல் கீரை

* கொலார்டு கீரை

பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகள்
* தக்காளி

* பட்டாணி

* சர்க்கரைவள்ளிக் கிழங்கு

* ப்ராக்கோலி

* ஸ்ட்ராபெர்ரி

* பேரிச்சம்பழம்

* அத்திப்பழம்

* உலர் திராட்சை

* உலர் கொடிமுந்திரி

* உலர்ந்த ஆப்ரிகாட் அல்லது பீச்

தானியங்கள்
தானியங்கள்
* செறிவூட்டப்பட்ட முழு கோதுமை பிரட்

* செறிவூட்டப்பட்ட பாஸ்தா

* கோதுமை மாவு

* ஓட்ஸ்

* சோளம்

* கம்பு பொருட்கள்

Related posts

எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் எடுப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்…

nathan

பெண்களே மாமியாரை இப்படி சமாளியுங்க.!

nathan

கோடைகாலத்தில் உங்களுக்கு அம்மை நோய் ஏற்படாமல் இருக்கணுமா?

nathan

இளம் பெண்களை தாக்கும் சிறுநீரகத் தொற்று

nathan

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan

தற்கொலை எண்ணம் வரக்காரணம் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா எப்பேர்ப்பட்ட சளியையும் கரைத்தெடுக்கும் அதிசய சிரப்!

nathan

தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

nathan

மது அருந்தும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan