இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரைகிளிசரைடையும் குறைத்து மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கிறது.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் மெல்லோட்டம்
‘ஜாக்கிங்’ எனப்படும் மெல்லோட்டத்தின் மூலம் பல நன்மைகள் விளைவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, ஜாக்கிங் செய்யும்போது, இதயம் சுருங்கி உடலின் பல பகுதிகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு சாதாரண நிலையை விட அதிகரிக்கிறது.
இதய ரத்தக் குழாய்களும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளும் வலுவடைகின்றன.
ரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்கள் தடுக்கப்படுகின்றன.
உயர் இரத்த அழுத்த நிலையைக் குறைக்க மெல்லோட்டம் துணைபுரிகிறது.
இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரைகிளிசரைடையும் குறைத்து மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கிறது.