மகரம்
மகர ராசிக்காரர்கள் பொய் சொல்வதை வெறுக்கிறார்கள், ஆனால் பொய் சொல்ல நிர்பந்திக்கப்படுகையில் அவர்கள் தவறான நேரத்தில் கூறுவதன் மூலம் எளிதில் மாட்டிக்கொள்வார்கள். இவர்கள் பொய் சொல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். இதுவே அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பும். முதலில் இவர்கள் பொய் சொல்ல முடிவெடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அதன்பின் அதன் பின்விளைவுகள் என்ன என்பது பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள். அதன்பின் மற்றவர்கள் நம்பும்படியான பொய்யுடன் அவர்கள் வருவார்கள். ஆனால் இவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அனைவரும் நன்கு அறிவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுக்கு முற்றிலும் எதிர்மறையானவர்கள். இவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக வாயில் வருவதை கூறிவிடுவார்கள். இதனால் எதிரில் இருப்பவர்கள் குழம்பி விடுவார்கள். இவர்களுக்கு சுயகட்டுப்பாடு என்பது குறைவு, எனவே உண்மையைக் கூறுவதால் இவர்களுக்கு பிரச்சினை எழும் என்று அறிந்தாலும் இவர்களால் அதனை கூறாமல் இருக்க முடியாது. இவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் பொய் கூறிவிடுவார்கள், அதனால் இவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பொய் கூறும்போது அது அவர்கள் முகத்திலேயே பட்டவர்த்தனமாக தெரியும். இவர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள், இவர்கள் நேர்மையாக தொடர்பு கொள்ளும்போது இது அவர்களின் அற்புத குணமாக இருக்கும். அதேசமயம் இது அவர்கள் பொய் கூறும்போது அவர்களுக்கே எதிரான குணமாக மாறிவிடும். இவர்களின் உதடுகள் ஒரு கதையைக் கூறும் ஆனால் இவர்களின் முகம் வேறு கதையைக் கூறும். இதனாலேயே இவர்கள் உண்மையைக் கூறிவிடுவார்கள். இவர்களுக்கு போலியான முகம் என்று எதுவுமில்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பொய் கூறுவதை கண்டறிவது சற்றுக் கடினமான ஒன்றுதான். ஏனெனில் அவர்கள் ஒரு பொய்யைக் கூறும் முன் அதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். இதனால் இவர்கள் கூறுவது பொய் என கண்டறிவது கடினம். ஆனால் இவர்கள் பொய் கூறும் தொனியில் சொதப்பி விடுவார்கள், ஏனெனில் இது இவர்கள் கூறுவது பொய் என காட்டிக்கொடுத்துவிடும். இவர்கள் பொய் கூறுவதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள், ஆனால் ஒன்று இவர்கள் அதிக கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் அல்லது கட்டுப்பாடே இல்லாமல் இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையான ராசிக்காரர் ஆவார்கள். எனவே இவர்களுக்கு உண்மையைக் கூறுவதுதான் மிகவும் எளிமையானதாகும். எனவே இவர்கள் பொய் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்போது அது திணிக்கப்பட்டதென வெளிப்படையாகத் தெரியும். எனவே இவர்கள் பொய் கூறும்போது ஏதாவது குறுக்குக் கேள்விகள் கேட்டால் இவர்கள் எளிதில் மாட்டிக்கொள்வார்கள். பொய் கூறி மாட்டிக்கொள்வதற்கு பதில் உண்மையையே கூறிவிடலாம் என்று இவர்கள் நினைப்பார்கள்.