26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
jkjhk
அழகு குறிப்புகள்

இத படிங்க! வேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க

நம் உடலில் சில இடங்களில் முடிகள் வளர்ந்து இருக்கும் இது நம்மை சற்று சங்கடமாக உணர வைக்கும் பெண்களின் முகங்கள், கை மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை அவர்கள் அகற்ற வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் ரேசர் பயன்படுத்தி இரண்டு நாட்களில் மறுபடியும் வளர்ந்து விடும்.

எனவே உங்கள் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீங்குவதற்கு மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வழிகளில் ஒன்று வேக்ஸிங் செய்வது. வேக்ஸிங் உங்களுக்கு மென்மையான சருமம் மற்றும் மெதுவான முடி வளர்ச்சி ஏற்படும். வேக்ஸிங்என்பது எல்லா பெண்களும் தற்போது செய்துக் கொள்கிறார்கள்.

ஆனால் வேக்ஸிங் செய்து கொள்ளுவதற்கு முன்பு இந்த வேக்ஸிங் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை நீங்கள் முதலில் ஆராய வேண்டும். தற்போது மார்க்கெட்களில் நிறைய விதமான வேக்ஸிங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு புதுவிதமான பலன்களை கொண்டுள்ளது. ஆனால் அவற்றுள் மிக முக்கியமாக மக்களிடையே இடம் பெற்ற ஒன்று சாக்லேட் வேக்ஸிங், இந்த டார்க் சாக்லேட் வேக்ஸிங் மற்றும் வெள்ளை சாக்லேட் வேக்ஸிங் இவை இரண்டுமே சலூன் மற்றும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

டார்க் சாக்லேட் வாக்ஸ்

இந்த டார்க் சாக்லேட் வேக்ஸிங்என்பது மற்ற வாக்ஸ்களை விடவும் மிகவும் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் இதில் உள்ள இங்கிரிடின்டஸ் சிறந்ததாக உள்ளது. அதாவது மற்ற வேக்ஸிங் அடிப்படையான தண்ணீர், லெமன் மற்றும் தேன் கலந்து உருவாக்கப்படுகிறது. ஆனால் டார்க் சாக்லேட் வேக்ஸிங்யில் கோகோ, சோயா ஆயில், பாதாம் ஆயில், கிளிசரின், வைட்டமின் மற்றும் ஆலிவ் ஆயில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே டார்க் சாக்லேட் வேக்ஸிங் சிறந்த ஒன்றாக அமையும்.
jkjhk

உட்பொருட்கள்

டார்க் சாக்லேட் வேக்ஸிங்யில் உள்ள உட்பொருட்கள் மிகவும் சிறந்ததாக உள்ளதால் இவை உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இது உங்கள் சருமத்தை எப்போதும் காய்ந்தோ அல்லது வறண்ட சருமமாக மாற்றாது.

சரும வகைகள்

டார்க் சாக்லேட் வேக்ஸிங் எல்லா சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். இது எந்த சருமத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. நீங்கள் உங்கள் சருமத்தைப் பற்றி கவலை கொண்டால் கண்டிப்பாக டார்க் சாக்லேட் வேக்ஸிங் தேர்ந்து எடுக்கலாம். இது உங்கள் சருமத்திற்கு சிறந்த பதில் அளிக்கும்.

பல ஆயில்கள்

டார்க் சாக்லேட் வேக்ஸிங் இதில் சோயா ஆயில், பாதாம் ஆயில், வைட்டமின் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் போன்ற பல வகையான நல்ல ஆயில்கள் பயன்டுத்தப்படுவதால் உங்கள் சருமத்தை மேலும் பளபளக்கச் செய்ய உதவுகிறது. ஒவ்வொரு பெண்ணும் விரும்புவதும் தான் சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதை தானே. அதற்கு டார்க் சாக்லேட் வேக்ஸிங் உதவியாக இருக்கும்.

வலியற்றது

டார்க் சாக்லேட் வேக்ஸிங் மிகவும் அற்புதமான வாசனையைக் கொண்டுள்ளது. மேலும் இந்த வேக்ஸிங் மற்ற வாக்ஸ்க்களை ஒப்பிடும்போது சற்று வலி குறைந்ததாக இருக்கும். எனவே நீங்கள் வலியைப் பற்றிக் கவலைக் கொள்ளத் தேவையில்லை. மேலும் டார்க் சாக்லேட் வேக்ஸிங் தேவையற்ற முடிகளை நீக்குவதுடன் உங்கள் சருமத்தை பொலிவடையச் செய்ய உதவுகிறது.

ஒயிட் சாக்லேட் வேக்ஸிங்

லிப்போசில் வேக்ஸிங்என்றும் அழைக்கப்படுகிறது. பல சலூன்களில் ஒயிட் சாக்லேட் வேக்ஸிங் உபயோகிக்கப்படுகிறது. இந்த வேக்ஸிங் ரிக்கா வேக்ஸிங் என்று அழைக்கப்படுகிறது. வெஜிடபிள் ஆயில், பீஸ்வேக்ஸிங்மற்றும் கிளிசரல் ரோசினேட் போன்றவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மற்ற வேக்ஸிங்களை ஒப்பிடும்போது ஏற்படும் அல்ர்ஜி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றில் இருந்து தப்பிக்க நீங்கள் ஒயிட் சாக்லேட் வேக்ஸிங் பயன்படுத்தலாம்.

வெப்பப்படுத்துதல்

ஒயிட் சாக்லேட் வேக்ஸிங்சுத்தமான ஆயில்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் உங்களுக்கு வலியற்றதாக இருக்கும். மேலும் ஒயிட் சாக்லேட் வேக்ஸிங்சூடுபடுத்தி பயன்படுத்தும் அவசியம் இல்லை அப்படியே நேரடியாக உங்கள் சருமத்தில் தேய்க்கலாம். மற்ற வேக்ஸிங் சூடுபடுத்தி உபயோகிப்பதால் சற்று எரிச்சல் மற்றும் சிவப்பு நிற மாற்றம் ஏற்படும். ஆனால் ஒயிட் சாக்லேட் வேக்ஸிங் அவ்வாறு எரிச்சல்களை ஏற்படுத்தாது.

சற்று உயர்வானது

ரிக்கா வேக்ஸிங் மற்ற வாக்ஸ்களை ஒப்பிடும் போது சற்று அதிக விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும் விரைவில் முடி வளராமல் சருமத்தை பாதுகாக்கும்

சென்சிடிவ் சருமம்

உங்கள் சருமம் மிகவும் சென்சிடிவ் சருமமாக இருந்தால் கூட நீங்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை. வெள்ளை சாக்லேட் வேக்ஸிங் உங்கள் சென்சிடிவ் சருமதிற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும். மேலும் உங்கள் சருமத்தை மிகவும் மென்மையாக வைக்க உதவுகிறது.

எண்ணெய் பயன்படுத்துதல்z

நீங்கள் வேக்ஸிங் செய்யும் முன்பும் பின்பும் உங்கள் சருமத்தில் எண்ணெய் தேய்த்து விட்டு வேக்ஸிங்செய்வது நல்லது. ஏனெனில் இது வலியை குறைத்து மேலும் ஒட்டாமல் இருக்க உதவும்.

Related posts

ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

புருவம் போதிய வளர்ச்சி பெற பலன் தரும் இந்த குறிப்புகள்!….

sangika

இதோ ஈஸியான டிப்ஸ்… முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம் இதை செய்யுங்கள்…

sangika

இத படிங்க உங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா?

nathan

முயன்று பாருங்கள்.. கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!

nathan

விரைவில் முதுமை தோற்றத்தை தரும் உணவுகள்

nathan

தினந்தோறும் மேக்கப் போட்டுக் கொண்ட பிறகு இதை செய்யுங்கள்!…

nathan