என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் – இரண்டரை கப்,
பொடியாக நறுக்கிய பரங்கிக் காய் – இரண்டரை கப்,
சீரகம் – ஒன்றே கால் டீஸ்பூன்,
ஓமம்-கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் – ஒன்றே கால் டீஸ்பூன்,
பெருங்காயம்-1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – சிறிது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்,
கரம் மசாலா- கால் டீஸ்பூன்,
உப்பு-தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அது வெடித்ததும் ஓமம், பெருங்காயம் சேர்க்கவும். கொத்தவரங்காய், பரங்கிக்காய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக் செய்யவும். அல்லது சாதாரண பாத்திரத்திலேயே கொத்தவரங்காய் வேகும் வரை சமைக்கவும். பரங்கிக் காயை நன்கு மசித்துவிட்டு, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.