24.1 C
Chennai
Sunday, Dec 15, 2024
dahi poori 08 1452254105 1
சிற்றுண்டி வகைகள்

இட்லி சாட்

மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.

சரி, இப்போது அந்த இட்லி சாட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: மினி இட்லி – 16 தயிர் – 4 டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – சிறிது சீரகப் பொடி – சிறிது சாட் மசாலா – சிறிது புதினா சட்னி – சிறிது இனிப்பு சட்னி – சிறிது ஓமப்பொடி – சிறிது வெண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் மின் இட்லியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் இட்லிகளை வைத்து, மேலே சிறிது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தட்டில் அந்த மினி இட்லிகளை வைத்து, அதன் மேல் முதலில் தயிர் ஊற்றி, மேலே இனிப்பு சட்னி, புதினா சட்னி, வெங்காயம், சிறிது சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவ வேண்டும். இப்போது சுவையான இட்லி சாட் ரெடி!!!

dahi poori 08 1452254105

Related posts

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan

தக்காளி பஜ்ஜி

nathan

பால் அப்பம்

nathan

அரிசி வடை

nathan

கேழ்வரகுப் பணியாரம்! பாரம்பர்ய உணவுப் பயணம்!!

nathan

கேரட் தோசை

nathan

கரும்புச் சாறு கீர்

nathan

பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan