மிகுந்த சிரமப்பட்டுச் செய்கின்ற ஆசனங்களை விட இலகுவாகச் செய்கிற சில ஆசனங்கள் நல்ல பலனைத் தரும்.
இடுப்பு, கால்களை வலுவாக்கும் வஜ்ராசனம்
ஆசனங்களுள் ஒன்று வஜ்ராசனம். மிகுந்த சிரமப்பட்டுச் செய்கின்ற ஆசனங்களை விட இலகுவாகச் செய்கிற சில ஆசனங்கள் நல்ல பலனைத் தரும். அவற்றில் ஒன்றாக வஜ்ராசனத்தைக் கருதலாம். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் எந்த நேரமும் செய்யக் கூடிய அதாவது சாப்பிட்ட பின்னரும் கூடச் செய்யக் கூடிய ஆசனம் இதுவாகும்.
செய்முறை :
விரிப்பில் இரண்டு கால்களிலும் முட்டி போட்டு அமர்ந்து, இரண்டு கால் பாதங்களின் மேற்பக்கமும் தரையில் படுமாறு, இரண்டு கால் பெருவிரல்களும் ஒன்றையொன்று பார்க்குமாறு வைத்துக் கொண்டு பின் பக்கங்களை குதிக்கால்களால் தாங்கியவாறு கைகளைத் தொடையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தியானத்திலோ அல்லது சாதாரணமாகவோ இருக்கலாம். இதைச் செய்யும் போது முள்ளந்தண்டும் பார்வையும் நேராக இருத்தல் வேண்டும்.
நன்மைகள் :
1. தட்டையான பாதங்கள் சரியான வடிவத்தைப் பெறும்.
2. விரல்களில் வலி, குதிகால்வலி, தசைச்சுளுக்குக்கு அற்புதமான மருந்து.
3. முழங்கால் நெகிழ்வுதன்மையானதாகவும், அதே சமயம் வலிமையானதாகவும் மாறும்.
4. மனோதிடம் உண்டாகும்,
6. உடலில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்றும்.
7. காலில் நரம்பு சுருண்டிருந்தால் அது நீங்கும்.
8. பிறப்பு உறுப்புக்களுக்குக் கூடுதலான குருதி பாய்வதால் அவற்றிலுள்ள சில குறைபாடுகள் நீங்குவதற்கான வாய்ப்புண்டு.