தலைக்கு குளிக்கும் ஷாம்புக்களில் அதிக ரசாயங்கள் கலக்கிறார்கள். இவை கூந்தல் மட்டுமல்ல, ரத்தத்திலும் கலந்து கேடு விளைவிக்கும்.
இயற்கையான சீகைக்காய் மற்றும் அரப்பு ஆகியவைதான் கூந்தலுக்கு உகந்தது என்றாலும் அவற்றை தெய்த்து குளிப்பதற்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை.
இதற்கு மாற்றாக என்ன செய்யலாம்? இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.
முட்டை ஓட்கா ஷாம்பு : எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் அருமையான ஷாம்பு இது. 2 டீ ஸ்பூன் வோட்காவில் 2 முட்டைகளை கலக்கி அதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். 2 நிமிடம் கழித்து குளித்தால் கூந்தல் உதிர்வது நிற்கும். எண்ணெய் அதிகம் சுரப்பது கட்டுப்படும்
சமையல் சோடா ஷாம்பு : உங்கள் தலையில் பொடுகு அதிகம் இருந்தால் இது சிறந்த முறையில் பலனைத் தரும். தேவையான அளவு சமையல் சோடாவை எடுத்து நீரில் கரைத்துக் கொள்ளுங்கள். அதனை தலைக்கு குளித்தபின் தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் நன்ராக தலைமுடியை அலசவும்.
கேஸ்டைல் சோப்- தேங்காய் பால் ஷாம்பு : கடைகளில் விற்கும் மூலிகை திரவ சோப்பான கேஸ்டைல் சோப்புடன் ஒரு கப் தேங்காய் பால கலந்து கொள்ளுங்கள். விருப்பமிருந்தால் இதனுடன் சில துளி, பாதாம் அல்லது லாவெண்டர் என்ணெய் விட்டுக் கொள்ளலாம். இந்த கலவையை தலைக்கு குளிக்கும்போது தலையில் ஷாம்பு போல் தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்து பிறகு அலசவும்.
க்ரீன் டீ ஷாம்பு : க்ரீன் டீ கூந்தலுக்கு மிகவும் ஏற்றது. நல்ல பளபளப்பை தரும். க்ரீன் டீத்தூளில் தே நீர் தயார் செய்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு கேஸ்டைல் சோப் சிறிது கலந்து கொளுங்கள். இதனை தலையில் தேய்த்து குளிக்கவும். இது கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
அவகாடோ ஷாம்பு : அவகாடோ உடைந்த முடியை சரிப்படுத்தும். கூந்தலின் நுனி பிளவை தடுக்கும். பலமான கூந்தல் பெற, அவகாடோவின் சதைப் பகுதியை நன்றாக மசித்து அதுனுடன் அரை ஸ்பூன் சமையல் சோட மற்றும் நீர் கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி 5 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும்.