எப்போதும் சுறுசுறுப்பாக, தங்களுக்குப் பிடித்தமான விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்களை மனஅழுத்தம் நெருங்காது.
ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?
கவலையையும், மனவேதனையையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும், சோர்வடைவதும் எல்லோருக்குமே இயல்பான ஒன்றுதான்.
ஆனால் மனஅழுத்தம் அடையும்போது இந்தச் சோர்வும், கவலையும் தொடர்ந்து நீடிக்கின்றன.
அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி குழப்பத்தை அதிகரிக்கின்றன.
தூக்க குழப்பம், கடும் களைப்பு, சோர்வு, காலையில் எழுந்திருக்க முடியாமை, பசியின்மை, தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன.
ஆனால் இதில் நீங்கள் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், இதுபோன்ற மனநிலையுடன் ஒருவர் தொடர்ந்து இருக்கபோவதில்லை.
அவரைச் சுற்றி இருக்கும் சூழ்நிலை மாறிவிட்டால், இந்த மன அழுத்தம் மாறிவிடும். அல்லது அவர் நினைத்தது நடந்துவிட்டால் மனஅழுத்தம் நீங்கிவிடும்.
மனஅழுத்தம் பொதுவாகவே சமூகத்தில் காணப்படக்கூடிய சாதாரண பாதிப்புதான்.
இளம் வயதில், குறிப்பாக ரத்த அழுத்தம் அதிகமாகும்போது மனஅழுத்தம் ஏற்படுகிறது. நம்மில் ஐந்தில் ஒருவருக்கும் மனஅழுத்தம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், மனஅழுத்தத்தைப் புறக்கணிக்காமல் அதற்கு உரிய நிவாரணம் தேடுவது நல்லது.
தொடர் மனஅழுத்தமானது ஒருவரது ஆரோக்கியத்தையும், குடும்ப வாழ்க்கையையும் பெருமளவில் பாதிக்கும்.
எப்போதும் சுறுசுறுப்பாக, தங்களுக்குப் பிடித்தமான விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்களை மனஅழுத்தம் நெருங்காது.