உணவு உண்ணாமல் இருப்பதால் நம்முடைய உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவதற்காக ஆய்வாளர்கள் புதிய ஆய்வொன்றை நடத்தினர்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் சுமார் 10 ஆயிரத்து 575 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது, அவர்களிடம் உணவுகள் எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும், ரத்தத்தில் இன்சூலின் மற்றும் சர்க்கரையின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் என்டோகிரைன் சொஷைட்டி (Endocrine Society) வெர்ச்ஷூவல் கான்பரன்சில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், காலை உணவை 8.30 மணிக்கு முன்பாக எடுத்து கொண்டால் டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் தப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருத்தல் அல்லது 10 மணிநேரத்துக்கும் குறைவான சமயங்களில் தேவையற்ற நேரங்களில் உணவை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இன்சூலின் எதிர்ப்பு அதிகரிப்பதை கண்டுபிடித்தனர்.
குறிப்பாக காலை உணவை வழக்கமாக 8.30 மணிக்கு பிறகு எடுத்துகொள்பவர்களுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை கண்டுபிடித்த அவர்கள், 8.30 மணிக்கு முன்பாக உணவு சாப்பிட்டுவிட்டு நாள் முழுவதும் உண்ணாமல் இருந்தால் கூட அவர்களுக்கு இன்சூலின் தவிர்ப்பு குறைவாக இருப்பதை பார்த்து வியப்படைந்தனர்.
அத்துடன் காலை நேரத்தில் அதிக ஊட்டசத்து மிக்க உணவுப் பொருட்களான காய்கறிகள் மற்றும் பழங்களின் கூட்டு கலவையை எடுத்துகொள்வது மிகவும் சிறந்தது எனவும் பரிந்துரைத்துள்ளனர்.