தேவையான பொருட்கள்:
சூடான சாதம் – 2 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
வரமிளகாய் – 3
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது.
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 இணுக்கு
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
வெல்லம் – 1 துண்டு
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* சூடான சாதத்தில் மஞ்சள் பொடி, பச்சைக் கறிவேப்பிலை, ½ டீஸ்பூன் உப்பு, 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாகக் கிளறி விடவும்.
* புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து உப்பைப் போட்டு வைக்கவும்.
* கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் பெருங்காயம் போடவும்.
* பெருங்காயம் பொரிந்ததும் கறிவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய், துருவிய இஞ்சி போட்டு கிளறி பின் மஞ்சள் பொடி போட்டு புளிச்சாறை ஊற்றவும்.
* அவ்வப்போது கிளறிவிடவும். நன்கு கொதித்து சுண்டியதும் எண்ணெய் பிரியும்போது பொடித்த வெல்லம் போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
* ஆறவைத்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நன்கு கலந்து விட்டு வறுத்த வேர்க்கடலை பொரித்துப் போட்டு அலங்கரிக்கவும்.
* ஆந்திரா புளியோகரே ரெடி.
Related posts
Click to comment